2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

நிர்மாணத்துறையின் போக்கை மாற்றியமைக்கும் D.P. Jayasinghe நிறுவனம்

Editorial   / 2017 ஒக்டோபர் 31 , பி.ப. 06:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கையில் நிர்மாணம் மற்றும் பதிகால் (Piling) ஆகிய துறைகளில் முன்னிலை வகித்து வருகின்ற நிறுவனங்களுள் ஒன்றான D.P. Jayasinghe Piling Co. (Pvt) LTD, உள்நாட்டு நிர்மாணத்துறையின் போக்கை மாற்றியமைக்கவுள்ள புத்தாக்கமொன்றை அறிமுகப்படுத்தவுள்ளது. 

 உலகத்தரம் வாய்ந்த ஜேர்மனிய பொறியியலை உபயோகிக்கும் இப்புதிய வழிமுறை இலங்கையில் பதிகால் தொழிற்றுறையில் முதன்முதலாக அறிமுகமாக்கப்படுவதுடன், தரம், வேகம், நெகிழ்வுத்தன்மை மற்றும் சௌகரியம் ஆகியவற்றைப் பொறுத்தவரையில் தொழிற்றுறையை அடுத்த மட்டத்துக்கு எடுத்துச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தொழிற்றுறையின் முன்னணி பிரபலங்கள், பொறியியலாளர்கள், ஆலோசகர்கள் மற்றும் நில அளவையாளர்கள் அடங்கலாக உச்ச நிபுணர்கள் பலரும் இந்த வைபவத்தில் கலந்துகொள்ளவுள்ளனர். 

 2013ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்ட D.P. Jayasinghe Piling Co. நிறுவனம், அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் முழுமையான தீர்வை வழங்கும் நிபுணத்துவ சேவை ஆளணியின் துணையுடன் உயர்ந்த மட்டத்தில் பிரத்தியேகமான சேவையை வழங்கி வருகின்றது. அத்திவார பொறியியல் இயந்திரத் தொகுதியைப் பொறுத்த வரையில் இலங்கையில் சந்தை முன்னோடியாகவும், ஜேர்மனிய வல்லுனர்களாகவும் திகழும் BAUER equipment South Asia (PTE) LTD நிறுவனத்திடமிருந்து கொள்முதல் செய்யப்படுகின்ற, தொழில்நுட்பரீதியாக மேம்பட்ட உபகரணங்களை மட்டுமே உபயோகித்து தர ஒப்பீட்டு நியமத்தை ஸ்தாபித்துள்ளது. 

 இத்துறையின் போக்கையே மாற்றியமைக்கவுள்ள இப்புத்தாக்கம் தொடர்பில், D.P Jayasinghe Piling Co. நிறுவனத்தின் பணிப்பாளர் சபைத் தலைவரும், முகாமைத்துவப் பணிப்பாளருமான உபாலி ஜெயசிங்க கருத்து வெளியிடுகையில், “நாட்டில் தற்போது பல்வேறு பாரிய செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், எதிர்காலத்தில் இன்னும் பல முன்னெடுக்கப்படவுள்ள நிலையில் இலங்கையில் நிர்மாணத்துறை தற்போது பாரிய வளர்ச்சிப் போக்கினை அடைந்து வருகின்றது. இதனால் சந்தையின் தேவைகளை ஈடு செய்வதற்கு எம்மைப் போன்ற நிறுவனங்கள் தம்மைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். செயற்றிட்டங்களை குறித்த காலத்தில் பூர்த்தி செய்வதற்கு மிகவும் தேவைப்படுகின்ற எழுச்சியை இலங்கையின் நிர்மாணத் தொழிற்துறைக்கு இப்புத்தாக்கம் வழங்கவுள்ளது. நேரத்தையும், செலவுகளையும் சேமிப்பதை இது உறுதி செய்வது மட்டுமன்றி, நாட்டின் எப்பகுதியிலும் பயன்படுத்தப்படக்கூடிய உயர் தரம் கொண்ட ஒரு தீர்வாகவும் இது விளங்கும்” என்று குறிப்பிட்டார்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .