2024 மார்ச் 28, வியாழக்கிழமை

நிறமூட்டப்பட்ட, தரமற்ற பருப்பு வகைகள் விற்பனை

Editorial   / 2018 ஓகஸ்ட் 02 , பி.ப. 03:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிறமூட்டப்பட்ட, தரமற்ற பருப்பு வகைகள் சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றமை தெரியவந்துள்ளதாக பொதுச்சுகாதார பரிசோதகர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இரத்தினபுரி மாவட்டத்தின் பல இடங்களில் இவ்வாறான தரமற்ற நிறமூட்டப்பட்ட பருப்புவகைள் விற்பனை செய்யப்படுகின்றமை தெரியவந்துள்ளது.

இந்த பருப்பை கழுவும் போது நீர் சிவப்பு நிறமாக மாறும். இந்த பருப்பு மிகவும் சிறியதாகும். பருப்பை வேகவைக்க வழமையை கூடுதலான நேரம் எடுக்கும் என்றும் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. 

இது பற்றி மக்கள் எச்சரிக்கையாக இருப்பது அவசியமாகும். இவ்வாறான பருப்பு வகைகள் தொடர்பாக பிரதேசத்தில் உள்ள பொதுச் சுகாதார பரிசோதகர்களுக்கு முறைப்பாடு செய்யுமாறு அந்தச் சங்கம் கோரியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X