2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

புதிய சியெட் ரேடியல் டயர்கள் அறிமுகம்

Gavitha   / 2017 ஏப்ரல் 25 , பி.ப. 02:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

சியெட் சந்தையில் புதிதாக ஏழு ரேடியல் டயர்களை அறிமுகம் செய்துள்ளது. சிறிய கார்கள், வான்கள், விளையாட்டு பாவனை வாகனங்கள், இலகு டிரக்குகள் என்பனவற்றுக்கான இந்தப் புதிய டயர்கள், விநியோகஸ்தர்களுக்கான ஒன்றுகூடல் நிகழ்வின் போது அறிமுகம் செய்து வைக்கப்பட்டன. இதன் மூலம் மொத்த ரேடியல் டயர்களின் எண்ணிக்கை நாற்பதாக உயர்ந்துள்ளது.  

ரேடியல் டயர் பிரிவு மற்றும் ஏனைய நான்கு பிரிவில் ஏற்கெனவே சந்தையில் முன்னணி வகிக்கும் சியெட் உற்பத்திகள் இலங்கையில் வாயு மூலமான டயர் தேவைகளில் அரைவாசிக்கும் அதிகமான பங்கை பூர்த்தி செய்கின்றன. அத்தோடு, இலங்கையில் அதன் உற்பத்திகளில் மூன்றில் ஒரு பங்கை 15 நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்கின்றது.  

ஏழு புதிய அளவிலான டயர்களை அறிமுகம் செய்யும் நிகழ்வில், விநியோகத்தர்கள் மத்தியில் பேசிய சியெட் களனி ஹோல்டிங்ஸ் தலைவர் சானக்க டி சில்வா இலங்கையின் டயர் சந்தையில் எப்போதுமே புதிய அறிமுகங்களை செய்வதில் கம்பனி முன்னணியில் இருந்துள்ளது. அத்தோடு எப்போதுமே அது தனது விநியோகஸ்தர்கள் நலனில் அதிக அக்கறையும் கொண்டுள்ளது என்று கூறினார். “இன்றைய தினமும் அதற்கு ஒரு விதிவிலக்கல்ல” என்று அவர் மேலும் கூறினார். “எமது திட்டங்களைப் பகிர்ந்து கொள்வதற்காக எமது பெறுமதிமிக்க விநியோகத்தர்களை ஒன்றிணைத்து அவர்களின் கருத்துக்களையும் உள்வாங்கி எமது செயற்பாடுகளை மேலும் விருத்தி செய்து கொள்ளும் ஒரு வாய்ப்புக்காக நாம் காத்திருந்தோம்”.  

சியெட் களனி முகாமைத்துவப் பணிப்பாளர் விஜய் காம்பீர் பேசுகையில் சியெட் எதிர்காலம் தொடர்பில் கூடிய கவனம் செலுத்துகின்றது. “எமது உற்பத்திகளின் விரிவாக்கத்துக்காகவும் உற்பத்தித் தர மேம்பாட்டுக்காகவும் நாம் தொழில்நுட்பத்தில் முதலீடு செய்கின்றோம். அத்தோடு வர்த்தக முத்திரையையும் நாம் கட்டி எழுப்பி வருகின்றோம். இவை எமது வாடிக்கையாளர்களின் தேவைகளை வலியுறுத்தி நிற்கின்றன” என்று குறிப்பிட்டார்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .