2024 மார்ச் 28, வியாழக்கிழமை

பிரகாசிக்கும் Hayleys Talawakelle Tea Estates PLC

Editorial   / 2020 மே 25 , பி.ப. 09:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேயிலைத் துறையில் முன்னெப்போதும் இல்லாத வகையில் மற்றுமொரு அடையாளத்தை அமைத்து, அண்மையில் முடிவடைந்த ஆசிய நிலைத்தன்மை அறிக்கையிடல் விருதுகள் (ASRA) 2019இல் ஹேலிஸ் தலவாக்கலை டீ எஸ்டேட்ஸ் பி.எல்.சி. (TTEL) இரண்டு வெள்ளி விருதுகளை வென்றுள்ளது.

தற்போது ஏற்பட்டுள்ள COVID-19 தொற்று நோய் காரணமாக சிங்கப்பூரிலிருந்து இணையத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விருது வழங்கும் நிகழ்விற்கு 200க்கும் மேற்பட்ட முன்னணி வர்த்தக தலைவர்கள், நிலைத்தன்மையின் கூட்டாளர்கள், கல்வியாளர்கள், வர்த்தக சங்கங்கள் மற்றும் வழக்கறிஞர் அமைப்புக்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். இந்த நிகழ்விற்கு கௌரவ விருந்தினராக சிங்கபூருக்கான சுவிடிஷ் தூதுவர் நிக்கலாஸ் குவார்ன்ஸ்ட்ரோம் தலைமை தாங்கியமை குறிப்பிடத்தக்கது.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்த ஹேலிஸ் பிளான்டேஷன்ஸின் முகாமைத்துவப் பணிப்பாளர் கலாநிதி ரொஷான் ராதுரை,

“தற்போது பரவி வரும் COVID-19 தொற்றுநோய் வர்த்தக செயற்பாடுகள், பொருளாதாரம் மற்றும் தொழில் நடவடிக்கைகளில் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளன. இந்த நிலைமை எதிர்பார்க்கப்பட்டவை அல்லது எதிர்பார்க்கப்படாதவை எதுவாக இருந்தாலும் இதனை வெற்றிகரமாக மேற்கொள்வதற்கு அரசாங்கமும், சமூகங்களும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும், அப்படி செய்யும் போது எவ்வாறான இடையூறுகள் இருந்தாலும் அதனை தாங்கிக் கொள்ள முடியும்.

“எதிர்காலத்தின் நிலையற்ற பொருளாதார நிலப்பரப்பில் வர்த்தகங்களின் ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதற்கு பொறுப்பான சூழ்நிலை, சமூக மற்றும் நிர்வாக நடைமுறைகளை பின்பற்றுவது அவசியமாகிவிட்டது. இந்த வெளிப்படைத் தன்மையில், வெளியீடு மற்றும் தரவு சார்ந்த விதிமுறைகள் ஒருங்கிணைந்தவையாகிவிட்டன – வர்த்தகங்கள் எவ்வாறு உணரப்படுகின்றன என்பதில் மட்டுமல்லாமல், அவை எவ்வாறு செழித்து எதிர்காலத்தில் ஸ்திரத்தன்மையுடன் தொடர முடியும் எனவும் கவனம் செலுத்த வேண்டும். ஆகவே, பெருகிவரும் இந்த முக்கியமான துறையில் எங்களது சாதனைகளும் TTEL மற்ற பிராந்திய நிறுவனங்களிடையே அங்கீகாரம் பெற்றதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்“ என தெரிவித்தார்.

இந்த இணையத்தளம் ஊடான நிகழ்வில் TTELக்கு ஆசியாவின் சிறந்த ஒருங்கிணைந்த அறிக்கை மற்றும் ஆசியாவின் சிறந்த ஒருங்கிணைந்த அறிக்கை வடிவமைப்பிற்கான வெள்ளி விருதுகள் வழங்கப்பட்டன. இந்த விருதுக்கான சிபாரிசு தீர்மானங்கள் சுயாதீனக் குழுவினால் மேற்கொள்ளப்பட்டதுடன், அதன் உள்ளீடுகள் பல கட்ட மதிப்பீட்டு செயன்முறையின் மூலம் இயக்கப்பட்டு, அதன் பின்னர் போட்டியாளர்களின் நற்பெயரைக் கருத்திற் கொண்டு இறுதித் தீர்ப்பு செயன்முறையின் கீழ் வெற்றியாளர் தெரிவு செய்யப்படுகிறார்.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்த TTELஇன் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான சேனக்க அலவத்தேகம,

“எங்களது வெளிப்படைத் தன்மை மற்றும் நடைமுறை சிறப்பிற்காக ஆசிய பிராந்தியத்தின் முன்னணி நிறுவனங்களிடையே அங்கீகாரம் பெற்றதற்கு நாங்கள் பெருமையடைகிறோம். எங்களது வர்த்தகத்தின் நிலைத்தன்மையை மேம்படுத்துவதற்கான புதிய வாய்ப்புக்களைப் பெறுவதற்காக மூலப்பெருள் பொருளாதார, சுற்றுச்சூழல் மற்றும் சமூக தாக்கங்கள் மற்றும் அபாயங்களை நாங்கள் எவ்வாறு நிர்வகிக்கிறோம் என்பதைத் தொடர்பு கொள்வதில் நிலைத்தன்மை அறிக்கை ஒரு ஒருங்கிணைந்த கருவியாக அமைந்துள்ளது” என தெரிவித்தார்.

ASRA தரம் மற்றும் உண்மையான அறிக்கையிடலுக்கான அளவுகோலை தொடர்ந்து உயர்த்தியுள்ளதுடன், மற்றும் ஆசியாவில் உள்ள நிறுவனங்களிடையே ஆரோக்கியமான போட்டியை அறிமுகப்படுத்தியுள்ளது. 2019 விழாவிற்கான வெற்றியாளர்கள் 16 நாடுகளில் இருந்து பெறப்பட்டு 461 உள்ளீடுகளில் இருந்து தெரிவு செய்யப்பட்டனர். அவற்றில் 80 நிறுவனங்கள் 13 நாடுகளிலிருந்து 19 பிரிவுகளில் இறுதிப் போட்டிக்காக பங்கேற்று தெரிவு செய்யப்பட்டனர்.

இந்த விருதுகள் ஆசியாவில் நிலைத்தன்மை அறிக்கை தலைவர்களை அங்கீகரித்து மதிப்பளிப்பதுடன், நிலைத்தன்மை அறிக்கையிடலில் சிறந்த நடைமுறைகளைக் கௌரவிக்கின்றன. ஆசியாவில் ஒரு நிலைத்தன்மை அறிக்கை அல்லது ஒருங்கிணைந்த அறிக்கையை உருவாக்கும் அனைத்து துறைகளிலும் உள்ள அனைத்து வகையான மற்றும் தனியார், பொது மற்றும் இலாப நோக்கற்ற நிறுவனங்களுக்கு இந்த விருதுகள் வழியைத் திறந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும், தேசிய வர்த்தக சிறப்பு விருதுகள் 2018இல் ஹேலிஸ் TTEL ஒட்டுமொத்த தங்க விருதினைப் பெற்று ஆதிக்கம் செலுத்தியது. அத்துடன் பெருந்தோட்ட நிறுவன வேளாண்மை மற்றும் பெருந்தோட்டத் துறையில், செயல்திறன் நிர்வாகத்தில் சிறந்து விளங்கியமை, திறன் மேம்பாட்டில் சிறந்து விளங்கியமை மற்றும் அதிகமான பெரு நிறுவன வகைகள் பிரிவிலும் தங்க விருதுகளை வென்றது. இதேபோல், TTEL 2019ஆம் ஆண்டில் ஜனாதிபதி சுற்றுச் சூழல் விருது வழங்கும் நிகழ்வில் தொடர்ச்சியாக ஆறாவது ஆண்டாக விருதுகளைப் பெற்றதுடன், 2019ஆம் ஆண்டிற்கான இந்த விருதைப் பெற்ற ஒரேயொரு பெருந்தோட்ட நிறுவனமாகும். தொழில் அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட சமூக உரையாடல் மற்றும் பணியிட கூட்டுத்தாபன விருதுகள் 2019இல் வெற்றிகரமான தந்திரோபாய நடவடிக்கைகளை மேலும் சிறப்பித்தமைக்கு TTEL தங்கம், வெள்ளி மற்றும் கௌரவ விருதுகளை வென்றது.

1878ஆம் ஆண்டு வாஸ் பீ. ஹேலிஸினால் காலி நகரத்தை மையமாகக் கொண்டு ஏற்றுமதி மற்றும் இறக்குமதி நிறுவனமாக ஆரம்பிக்கப்பட்ட ஹேலிஸ் நிறுவனம் சிறப்பு மற்றும் புத்தாக்கம் ஆகியவற்றுடன் 140 வருடத்துக்கு மேலான சேவையை வழங்கி வருவதோடு, ஹேலீஸ் குழுமம் நிலையான புத்தாக்கத்துடன் உலகை சிறப்பாக எதிர்கொண்டு உலகின் 5 வலயங்களில் 16 பிரிவுகளில் தடம்பதித்துள்ள பல்நோக்கு நிறுவனமாகும். நிகழ்காலத்தில் இலங்கை வியாபார துறையில் முன்னணி இடத்தை பெற்றுள்ள நிறுவனம் ஒரு பில்லியன் டொலர்களை வருமானமாக பெற்ற முதலாவது நிறுவனமாக பட்டியலிடப்பட்டுள்ளது. அத்துடன் இலங்கையின் ஏற்றுமதி வருமானத்தில் 3.3% பங்களிப்பை ஹேலீஸ் நிறுவனமே வழங்குகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X