2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்பில் நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி ஈடுபாடு

Editorial   / 2018 ஜனவரி 29 , மு.ப. 02:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

துறைசார் பல்கலைக்கழகங்கள், பங்காண்மைகள் ஊடாக இளைஞர்களை எதிர்காலத்துக்குத் தயார்ப்படுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, மாணவர்களின் மென் ஆளுமைகளை மேம்படுத்தும் நோக்கில் நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி தனது இடையீடுகளை மேற்கொண்டிருந்தது.

கொழும்பு பல்கலைக்கழக பழைய மாணவர் சங்கம் மற்றும் மாணவர் சமூக அமைப்பான விஞ்ஞான பீடத்தின் Base for Enthusiasts of Environmental Science and Zoology (BEEZ) ஆகியவற்றுடன் கைகோர்த்து இந்த இடையீடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.  

மென் ஆளுமை அபிவிருத்தி தொடர்பில் நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கியின் Hive பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற பயிற்சிப்பட்டறையில் கலை, முகாமைத்துவம் மற்றும் விஞ்ஞான பீடங்களைச் சேர்ந்த 31 மாணவர்கள் பங்கேற்றிருந்தனர்.

இதில், அவர்களின் புத்திகூர்மையை மேம்படுத்திக்கொள்வது, இடையீட்டுத் தொடர்பாடல் மற்றும் பிரத்தியேக அதைவு போன்றவற்றை மேம்படுத்திக்கொள்ளக்கூடிய நுட்பமுறைகள் பற்றிய விளக்கங்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தன. விடயம் தொடர்பான நிபுணத்துவம் நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கியின் சிரேஷ்ட முகாமைத்துவ அணியைச்சேர்ந்த கேஷினி ஜயவர்தன வழங்கியிருந்தார். 

அடுத்த மூன்று மாதங்களுக்கு இந்த முகாமைத்துவ அணி, குறித்த மாணவர்களின் செயற்பாடுகளை கண்காணிக்கும். கொழும்பு பல்கலைக்கழகத்தின் பழைய மாணவர் சங்கம், பிரிட்ஜ் பார்ட்னர்சிப் மற்றும் நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி ஆகியன இணைந்து கடந்த ஆண்டில் முன்னெடுக்கப்பட்ட இதுபோன்ற பயிற்சிப்பட்டறையின் இரண்டாவது பயிற்சிப்பட்டறையாக இது அமைந்திருந்தது.   

நிலைபேறான அபிவிருத்தியில், இளைஞர்களை ஈடுபடுத்தும் வகையில், வங்கியினால் ‘Green Gen’ எனும் மாநாடு மற்றும் சூழல்சார் போட்டிகளுக்கான விருதுகளுக்கு அனுசரணை வழங்கப்பட்டிருந்தது.

ட்ரேஸ் எக்ஸ்பேர்ட் சிட்டியில் Base for Enthusiasts of Environmental Science and Zoology (BEEZ) அமைப்பால் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில் பாடசாலை மாணவர்கள், பட்டதாரிகள் மற்றும் தனியார் துறையைச் சேர்ந்த இளைஞர்கள் என 200க்கும் அதிகமான பங்குபற்றுநர்கள் பங்கேற்றிருந்தனர்.     


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .