2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

பாற்பண்ணைத்துறையில் பொன்டெரா ரூ. 2 பில்லியன் முதலீடு

Editorial   / 2017 மே 31 , மு.ப. 02:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் உள்நாட்டு பாற்பண்ணைத் துறையை மேம்படுத்தவும், உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பாற்பண்ணை பொருட்களை கொள்வனவு செய்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கவும், பத்தாண்டு திட்டமொன்றை முன்னெடுக்க ஃபொன்டெரா பிரான்ட்ஸ் ஸ்ரீ லங்கா முன்வந்துள்ளது.

அங்கர் வலுவூட்டலுடன் பாற்பண்ணை கூட்டாண்மைக்கு அண்மையில் 2 பில்லியன் ரூபாய் முதலீடு மேற்கொள்ளப்பட்டிருந்தது. இது, உறுதியான மற்றும் நிலைபேறான மாற்றத்தை பெற்றுக்கொடுக்க பங்களிப்பு வழங்குவதாக அமைந்திருந்தது. துறையில் காணப்படும் ஆயிரக்கணக்கானோரின் திறன்களை மேம்படுத்துவதில் இது பங்களிப்பு வழங்குவதுடன், மாற்றங்களை மேற்கொள்ளக்கூடிய விநியோகத்தொடர் புத்தாக்கங்களை அறிமுகம் செய்வதனூடாக, உயர் தரம் வாய்ந்த போசாக்கை இலங்கையர்களுக்கு பெற்றுக்கொடுக்கவும் முன்வந்துள்ளது.

ஃபொன்டெராவின் ஒரு தசாப்த கால 10 பில்லியன் ரூபாய் முதலீட்டுக்கான அர்ப்பணிப்பில் அண்மைய செயற்பாடுகள் அங்கம் வகிப்பதுடன், இதில் ஆயிரக்கணக்கான பாற்பண்ணையாளர்களுக்கு பயிற்சிகள் மற்றும் கல்விசார் நடவடிக்கைகள், உள்நாட்டு பாற்பண்ணை தயாரிப்புகளுக்கான விரிவுபடுத்தப்பட்ட பதப்படுத்தல் திறன் மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்தி செயற்றிட்டங்கள் முக்கிய மேம்படுத்தும் அடித்தளமாக அமைந்துள்ளது.

இதில், பன்னல பகுதியில் அமைந்துள்ள 117 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட ஃபொன்டெராவின் விளக்கமளிக்கும் மற்றும் பயிற்சிப்பண்ணையை குறிப்பிட முடியும். கடந்த ஆண்டு நிறுவப்பட்ட இந்த நிலையம், தனியார் துறையைச் சேர்ந்த நிறுவனமொன்றினால் மேற்கொள்ளப்பட்ட முதலாவது திட்டமாக அமைந்துள்ளதுடன், பண்ணை முகாமைத்துவம் தொடர்பில் சிறந்த பாற்பண்ணை செயற்பாடுகளை பகிர்ந்து கொள்ளும் வகையில் அமைந்துள்ளது.

முதலாவது ஆண்டு செயற்பாட்டின் போது, இந்த நிலையத்தின் மூலமாக 3,500 பாற்பண்ணையாளர்களுக்கும், கால்நடை வைத்தியர்களுக்கும், கால்நடை அபிவிருத்தி வழிகாட்டுநர்களுக்கும் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் பயிற்சிகள் மற்றும் கல்விசார் நிகழ்ச்சிகளினூடாக பயனுள்ள விடயங்கள் வழங்கப்பட்டிருந்தன.

மேலும், 100 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான தொகை ஃபொன்டெராவின் விநியோக உறவுகள் அலுவலகங்களின் ஊடாக பாற்பண்ணையாளர் பயிற்சிகளுக்காக முதலீடு செய்யப்பட்டுள்ளன. பாற்பண்ணையாளர்களுடன் நெருக்கமாக பணியாற்றி தரமான பால் மற்றும் உற்பத்தித்திறன் ஆகியவற்றினூடாக, அவர்களின் வருமானத்தை மேம்படுத்திக் கொள்வதற்கான வழிகாட்டல்களும் உதவிகளும் வழங்கப்படுகின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .