2024 ஏப்ரல் 17, புதன்கிழமை

’பாலின உள்வாங்குதலினூடாக விவசாய உற்பத்தித் திறனுக்கு உதவிகளை வழங்கல்’

Editorial   / 2020 ஏப்ரல் 01 , பி.ப. 06:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

2020 சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி உதவியில் முன்னெடுக்கப்படும் விவசாயத்துறையை நவீன மயப்படுத்துவதற்கான தொழில்நுட்ப உதவி நிகழ்ச்சித்திட்டம் (TAMAP), உலக உணவு மற்றும் விவசாய ஸ்தாபனம் (FAO) மற்றும் பெண்கள் ஆய்வு நிலையம் (CENWOR) ஆகியவற்றுடன் இணைந்து 'பாலின உள்ளவாங்குதலினூடாக விவசாய உற்பத்தித் திறனுக்கு உதவிகளை வழங்கல்' எனும் தலைப்பில் மாநாடு ஒன்று அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பத்தரமுல்ல வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், விவசாயத்துறையின் உற்பத்தித் திறனை மேம்படுத்துவதற்கு பாலின சமத்துவத்தை எவ்வாறு உள்வாங்குவது என்பது தொடர்பான புதிய சிந்தனைகளை விவசாயத் துறையைச் சேர்ந்த அபிவிருத்தி செயற்பாட்டாளர்களிடமிருந்து வெளிக் கொண்டுவருவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது.

மேலும், கொள்கை வடிவமைப்பாளர்கள், நன்கொடை வழங்குநர்கள், செயற்திட்ட வடிவமைப்பாளர்கள், தனியார் துறை பிரதிநிதிகள், ஆய்வாளர்கள் மற்றும் பொது மக்கள் ஆகிய சகல தரப்பினர் மத்தியில், நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு பெண்களின் பங்களிப்பை மேம்படுத்துவது தொடர்பில் இலங்கையில் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் தொடர்பான கவனத்தை ஈர்க்கும் செயற்பாடாக இந்த மாநாடு அமைந்திருந்தது.

இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவின் தலைமை அதிகாரி பிராங்க் ஹெஸ் கருத்துத் தெரிவிக்கையில், 'விவசாயத்துறையில் பெண்களின் பங்களிப்பு என்பது இலங்கையில் குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளதுடன், குறைந்தளவில் ஈடுபடுத்தப்படுகின்றது. தீர்மானமெடுத்தலில் அதிகளவு பெண்கள் ஈடுபடுத்தப்பட்டால், குறித்த பெண்ணுக்கு மாத்திரம் அனுகூலமாக அமையாமல், முழுக் குடும்பத்துக்கும் அனுகூலமளிப்பதாக அமைந்திருக்கும்” என்றார்.

இலங்கையின் ஊழியர் செயலணியில் பெண்களின் பங்களிப்பு என்பது 35% எனும் குறைந்த மட்டத்தில் அமைந்துள்ளது. இவ்வாறான செயற்பாடுகளினூடாக பெண்களின் பங்குபற்றலை அதிகரிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுவதுடன், நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு பெண்கள் வழங்கும் பங்களிப்பை அதிகரிப்பதாக அமைந்திருக்கும்.

அண்மையில் முன்னெடுக்கப்பட்ட இரு ஆய்வுகளான CENWOR இனால் முன்னெடுக்கப்பட்ட 'பாலின சமத்துவ விவசாய கொள்கைகள்' மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தினால் முன்னெடுக்கப்பட்ட '2018 விவசாயத்துறை வரவு செலவுத் திட்டத்தில் பாலின பிரதிபலிப்பு' ஆகியவற்றின் பெறுபேறுகள் பங்கேற்றவர்களின் நபர்கள் மத்தியில் பகிரப்பட்டிருந்தது.

ஆய்வின் பிரகாரம், விவசாய உப துறைகளில் பெண்கள் பெருமளவில் ஈடுபடுவதாகவும், ஆண்களுடன் நிகராக செயலாற்றுவதும் இந்த ஆய்வில் கண்டறியப்பட்டிருந்தது. இலங்கையில், விவசாயத் துறையினால் நாட்டின் மொத்த தேசிய உற்பத்திக்கு 7.7% பங்களிப்பு வழங்கப்படுவதுடன், மொத்த சனத்தொகையில் 27% ஐ கொண்டுள்ளது. இதில் 38% ஆனவர்கள் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கையிலுள்ள 2.1 மில்லியன் விவசாயத்துறைசார் இல்லங்களில் 19% ஆனவை பெண்களை தலைமைத்துவமாகக் கொண்டுள்ளன. நாட்டிலுள்ள 2.3 மில்லியன் விவசாயத்துறைசார் செயற்பாட்டாளர்களில் 75% ஆனவர்கள் ஆண்கள் என்பதுடன், 25% ஆனவர்கள் பெண்கள். குடும்பசார் பங்களிப்பை வழங்கும் பணியாளர்களில் 78.9% ஆனவர்கள் பெண்கள் என்பதுடன் 21.1% ஆனவர்கள் ஆண்கள்.

எவ்வாறாயினும், விவசாயத்துறையில் பெருமளவாக ஈடுபட்டுள்ள பெண்கள் உப விவசாய செயற்பாடுகளை முன்னெடுக்கின்றனர். இது 'சிறு பொருளாதாரம்' என கருதப்படுவதுடன், மதிப்பிடப்பட்டுள்ள ஆண்ஃபெண் வருமான விகிதம் 0.31% ஆக அமைந்துள்ளது. மேலும், பெண்கள் விவசாய நடவடிக்கைகளுக்காக காணியை பெற்றுக் கொள்வது, நீடிப்பு சேவைகளை பெறுவது மற்றும் இயந்திரவியல் விவசாய செயற்பாடுகள் மற்றும் பணமீட்டும் விவசாயச் செய்கை போன்றவற்றில் ஈடுபடுவதில் சவால்களை எதிர்நோக்குகின்றனர்.

விவசாயத்துறைசார்ந்த ஊழியர்களில் திறனற்றவர்களாக பெண்கள் பெரும்பாலும் காணப்படுகின்றனர். எனவே மதிநுட்பமான விவசாய செயன்முறைகள் மற்றும் டிஜிட்டல் மயப்படுத்தப்பட்ட விவசாய நடவடிக்கைகளில் ஆண்கள் மற்றும் பெண்களை ஊக்குவிப்பது அத்தியாவசியமான தேவையாக அமைந்துள்ளது. பெறுமதி தொடரில் பெண்கள் உயர் நிலையில் காணப்பட வேண்டும் என ஆய்வுகள் குறிப்பிடுவதுடன், பெறுமதி சேர்ப்பை உறுதி செய்வதற்காக அவர்களுக்கு தொழில்நுட்பத்தை அணுகுவதற்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பாலின உள்ளடக்கமான நவீன விவசாய செயற்பாடுகளினூடாக தற்போது விவசாயத்துறையிலிருந்து சேவைத் துறைக்கு ஊழியர்கள் மாற்றமடைவதை மந்தமடையச் செய்யும் என்பதுடன், விவசாயத்துறைசார் உற்பத்தித் திறனில் நீண்ட கால அடிப்படையில் ஏற்படக்கூடிய எதிர்மறைத்தாக்கத்தை குறைப்பதாக அமைந்திருக்கும்.

இந்த மாநாட்டின் போது குழுநிலை கலந்துரையாடல்கள் அடங்கியிருந்ததுடன், பிரதான தலைப்புகள் தொடர்பான கலந்துரையாடல்களுக்கும் இடமளித்திருந்தது. இதில் பங்குபற்றியோரில், விவசாய மற்றும் பாலின உள்ளடக்க திட்டமிடல் மற்றும் விவசாய உற்பத்தித் திறனை மேம்படுத்துவதற்கு நிதி ஒதுக்கீடு திணைக்களத்தின் அபிவிருத்தி மேலதிக பணிப்பாளர் நாயகம் ஜயந்த இளங்ககோன், நிலைபேறான அபிவிருத்தி இலக்குகள் (SDG) 2030 நிகழ்ச்சி நிரலின் வறுமை ஆய்வு நிலையத்தின் சிரேஷ்ட ஆய்வு நிபுணர் காயத்ரி லொகுகே, நீர்ப்பாசன திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் பொறியியலாளர் பத்ரா கமலதாஸ, கொள்கை கற்கைகள் கல்வியகத்தின் ஆய்வு நிபுணர் கலாநிதி. பிலீஷா வீரரத்ன ஆகியோர் கலந்து கொண்டனர். கலந்துரையாடலின் நிறைவில், கேள்வி பதில் நிகழ்வும் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

நிதி, பொருளாதார மற்றும் கொள்கை திட்டமிடல் அமைச்சு, மஹாவலி, விவசாய, நீர்பாசனம் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சு மற்றும் TAMAP ஆகியன கைகோர்த்து முன்னெடுக்கும் பரந்த விவசாய கொள்கை மற்றும் அதனை நடைமுறைப்படுத்தும் மூலோபாயம் ஆகியவற்றுக்கு பயனுள்ள உள்ளம்சங்களை வழங்கும் வகையில் இந்த மாநாடு அமைந்திருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .