2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

பாவனையாளர்களை பரவசப்படுத்தும் Samsung Galaxy J8

Editorial   / 2018 ஜூலை 25 , பி.ப. 12:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

சம்சுங் ஸ்ரீ லங்கா, அனைவர் மனதையும் வென்ற தனது J வரிசையின் புதிய மொடலான J8 ஐ வெளியிட்டுள்து. Galaxy J8 அண்மையில் அறிமுகம் செய்துள்ள  Infinity மொடல்களின் வரிசையின் ஓர் அங்கமே என்பதோடு, பெரியளவிலான 6” Super AMOLED Infinity Display மற்றும் முதல் முறையாக இரட்டை கமெரா புத்தாக்கத்தையும் கொண்டமைந்துள்ளது.

Galaxy J8 ஆனது ரூ.51,190 விலையில் சந்தைக்கு வந்துள்ளதோடு அங்கிகாரம் வழங்கப்பட்ட விநியோகஸ்தர்கள் மற்றும் ஒன்லைனில் wow.lk ஊடாகப் பெற்றுக்கொள்ளலாம். இப் புதிய சாதனங்கள் கறுப்பு, நீலம் மற்றும் கோல்ட் ஆகிய நிறங்களில் கிடைக்கின்றன.   

Galaxy J8 இனது சந்தை வெளியீடு பற்றிப் பொது முகாமையாளரும் கையடக்கத் தொலைபேசி வணிகத் தலைவருமான சாந்தா பெர்னான்டோ கருத்துத் தெரிவிக்கையில், “J8 வரிசையானது கட்டுப்படியாகும் விலையில் புத்தம்புதிய அம்சங்கள் நிறைந்ததாக J ஸ்மார்ட்போன் பாவனையாளர்களுக்கு அதிக பெறுமதியைப் பெற்றுத்தரும் நோக்கிலேயே எப்பொழுதும் அமைந்துள்ளது. இளம் வயதினரிடையே போட்டோ எடிட்டிங் முக்கியமான ஒன்றாக காணப்படுவதாக எமது வாடிக்கையாளர்களின் கருத்துகள் தெரிவிக்கின்றன. அதனாலேயே நாம் மேம்படுத்தப்பட்ட இரட்டை பிற்புற கமெராவை Galaxy J8 இற்கு அறிமுகம் செய்துள்ளோம். இச்சாதனத்தின் செயற்றை நுண்ணறிவு Galaxy J8 இனது போட்டோ ஒன்றின் முன்புலம் மற்றும் பின்புலத்தில் மாற்றங்களை மேற்கொள்ள அனுமதித்து, நேர்த்திமிக்க போட்டோகளை நீங்கள் பெற உதவுகின்றது. பயனர்கள் படம் ஒன்றைக் ‘க்ளிக்’ செய்வதற்கு முன்னதாகவும் மற்றும் பின்னரும் பின்புலத்தின் மங்கல் தன்மையை விருப்பத்திற்கேற்ப மாற்றியமைக்கலாம்” என்று தெரிவித்தார்.   

Galaxy J8 மூன்று புதிய சக்திமிக்க இரட்டை கமெரா சிறப்பம்சங்களை அறிமுகம் செய்துள்ளது. Background Blur Shape, Portrait Dolly, மற்றும் சமூக வலைதளங்களில் கவனத்தை ஈர்க்க உதவும் Portrait Backdrop என்பனவே அவை. இரட்டைக் கமெரா சம்சுங் இனது தனித்துவமான சிறப்பம்சமாக ‘Live Focus’ வசதியை வழங்குவதோடு, இதனூடாக பயனர்கள் முன்புலத்துக்கு மிகக் கூர்மையான அவதானத்தைத் தந்து, பின்புலத்தை மங்கலடையச் செய்யலாம்.

Background Blur Shape வசதியோடு பின்புலத்தில் மென்மையான ஒளியை வெவ்வேறு விதமாகப் புகுத்தி, உங்கள் படங்களுக்கு மேலும் உயிரூட்டலாம். அடிப்படை இரட்டைப் பிற்புற கமெரா அமைப்பு f/1.7 aperture உடன் 16MP மற்றும் f/1.9 aperture உடன் 5MP கொண்டுள்ளது. முற்புற கமெரா f/1.9 aperture உடன் 16MP அமைப்பாகும். அத்துடன் இச் சாதனம் புதிய அன்ட்ரொய்ட் வெளியீடான Oreo 8.0 உடன் வெளிவந்துள்ளது.   

வீடியோவை இரசித்துக் கொண்டே Chat செய்வதற்காக, Galaxy J8 தடங்கலற்ற வீடியோ அனுபவத்தை மெசேஜ் செய்து கொண்டே அனுபவிப்பதற்கான விசேட வசதியைக் கொண்டுள்ளது. வீடியோவை இரசிப்பதால் உங்கள் மெசேஜிங் இனி பாதிக்கப்படாது. இதன் Transparent Keyboard உதவியுடன் மெசேஜ் செய்துகொண்டே வீடியோவை எவ்வித தடங்கலுமின்றி இரசிக்க முடியும்.   

 Galaxy J8 உயர்தர பொலிகாபனேட்டால் ஆக்கப்பட்ட ஒற்றை உடலமைப்புடன் கவர்ச்சிகரமான வளைவுகள் மற்றும் ஸ்டைலான, பயன்படுத்த எளிதான வடிவமைப்புடன் அமைந்துள்ளது. இதன் செயற்திறனுக்கு Snapdragon 450 processor மேலும் சக்தியளிக்கின்றது. 3,500 mAh பற்றரியையும் கொண்டுள்ள Galaxy J8 இனது சேமிப்புக் கொள்ளளவு   4GB + 64GB memory உடன் 256 GB வரை அதிகரிக்க முடியும்.     


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .