2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

பிறவுன்ஸ் சக்தி ஆரம்பம்

Editorial   / 2018 ஏப்ரல் 23 , மு.ப. 03:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

சமூகம் சார் பொறுப்புகளைத் தனது வியாபாரக் கொள்கையின் ஓர் அங்கமாக உள்ளடக்குவதன் ஊடாக, பின்தங்கிய சமூகங்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதில் உறுதிபூண்டுள்ள பிறவுன்ஸ் நிறுவனம், சமூகம் சார் பொறுப்புகளை உள்ளடக்கி, ‘பிறவுன்ஸ் சக்தி’ ஐ உருவாக்கியுள்ளது. இது பிறவுன்ஸ் குழுமத்தின் ஒருங்கிணைந்த சமூகம் சார் பொறுப்புகளின் (CSR) வர்த்தகச் சின்னமாகும்.  

‘பிறவுன்ஸ் சக்தி’ முயற்சியின் முதல் திட்டமாக, கலேன்பிந்துனுவெவ பிரதேசத்தில் அமைந்துள்ள தோடாமடுவ வித்தியாலயம் புனரமைப்புச் செய்யப்பட்டது.  

இதன் தொடக்கமாக, கல்வித் துறைக்குச் சேவையளிப்பதற்கு முக்கியத்துவம் அளித்த நிறுவனமானது, அதன்பொருட்டு பின் தங்கிய பிரதேசங்களில் உள்ள அதற்குப் பொருத்தமான பாடசாலைகளைத் தெரிவு செய்திருந்தது.   அநுராதபுரத்துக்கு அப்பால் கலேன்பிந்துனுவெவவில், உள்ள சீவலகுலமவில் அமைந்துள்ள தோடாமடுவ வித்தியாலயமானது, குறைந்த வளங்களுடன் காணப்படுகின்ற போதிலும் வொலிபோல், கலை மற்றும் கல்விச் செயற்பாடுகளில் வலய மட்டத்தில் சிறந்து விளங்குகின்றது.  

‘பிறவுன்ஸ் சக்தி’யானது, தோடாமடுவ வித்தியாலயத்தின் உடனடித் தேவைகளைப் பூர்த்திசெய்வதன் மூலம் அப்பாடசாலையின் தற்போதைய மற்றும் எதிர்கால மாணவர்களுக்குச் சக்தியாக இருக்கமுடியும் என்பதால், பிறவுன்ஸ் கம்பனி மகிழ்ச்சியடைகின்றது.  

அப்பாடசாலையானது ஊக்கம்மிக்க அதிபர் மற்றும் உறுதிபூண்ட ஊழியர்களைக்கொண்டிருந்தமையை பிறவுன்ஸ் கம்பனியால் அவதானிக்க முடிந்ததுடன், தோடாமடுவ வித்தியாலயத்தை ‘பிறவுன்ஸ் சக்தி’ மூலம் புனரமைப்புச் செய்யும் முதல் பாடசாலையாகத் தெரிவுசெய்யவும் முடிந்தது. அந்தத் தெரிவுசெய்யப்பட்ட பாடசாலையின் மாணவர்களில் பெரும்பான்மையானோர், கடுமையாக உழைக்கும் விவசாய சமூகம் மற்றும் நாளாந்த வருமானம் பெறும் உழைப்பாளிகள் குழுக்களைச் சேர்ந்தவர்கள்.   

 ‘பிறவுன்ஸ் சக்தி’ குழு, 2017 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம், தோடாமடுவ வித்தியாலயத்தில் தனது புனரமைப்பு நடவடிக்கைகளை ஆரம்பித்த போது, அப்பாடசாலையின் நூலகமானது மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான புத்தகங்கள், கதிரைகளைக் கொண்ட பாழடைந்த அறையாகக் காணப்பட்டதுடன், பிள்ளைகள் பெரும்பாலும் புளிய மரங்களின் அடியிலேயே வாசிப்பில் ஈடுபட்டனர்.  சீரற்ற மைதானங்கள், புற்றரைகளிலேயே கரப்பந்தாட்டப் பயிற்சிகளில் ஈடுபட்டுவந்தனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .