2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

பீபள்ஸ் இன்ஷுரன்ஸின் தொடர்பாடல் பங்காளராக மொபிடெல்

Editorial   / 2018 ஏப்ரல் 26 , மு.ப. 04:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

பீபள்ஸ் இன்ஷுரன்ஸ், தமது உத்தியோகபூர்வ தொடர்பாடல் பங்காளராக,  இலங்கையின் தேசிய மொபைல் சேவை வழங்குனரான, மொபிடெல் உடன் கைகோர்த்துள்ளது.  இக்கூட்டிணைவின் மூலம், காப்புறுதி நிறுவனத்தின் ஒட்டுமொத்த மொபைல்  தொடர்பாடல் தேவைகளுக்கான தீர்வுகளை வழங்குவதே இதன் நோக்கம் ஆகும். 

பீபள்ஸ்  இன்ஷுரன்ஸ், மக்கள் வங்கிக் குழுமத்தின் துணை நிறுவனமாகும். அத்துடன்  காப்புறுதித் தொழிற்துறையிலும் முக்கிய பங்கு வகித்து வருகிறது.  ஆயுள்  காப்புறுதியற்ற காப்புறுதித் துறையில், உயர் மட்ட நடிபாகத்தை வகிப்பவர்  என்ற வகையில், தமது பங்குதாரர்களுக்கு நீண்ட கால மதிப்பை உருவாக்குகிறது.  

இக்கூட்டிணைவைப் பற்றி, பீபள்ஸ் இன்ஷுரன்ஸ் இன் பிரதான நிறைவேற்று  அதிகாரியான தீபால் அபேசேகர கருத்து தெரிவிக்கையில்,  “எமது உத்தியோகபூர்வ தொடர்பாடல் பங்காளராக, மொபிடெல் உடன்  கூட்டிணைந்து உள்ளதையிட்டு பெருமகிழ்ச்சியடைகிறேன். இதுவொரு நன்மை  பயக்கும் உறவாகிடும் என நம்புகிறேன். காரணம், மக்கள் வங்கிக்  குழுமத்தின் உறுப்பினர் என்ற வகையில், எமது பன்முகத்தன்மை மற்றும்  புத்தாக்கம் மிக்க அணுகுமுறை என்பன, மொபிடெல் இனால் பிரதிபலிக்கப்படுகிறன.  இது நாட்டின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொடர்பாடல் துறையில் முதல் தரம்  வகிக்கும் பல பேருக்கு முன்னோடியாகத் திகழ்ந்துள்ளது. பீபள்ஸ் இன்ஷரன்ஸ்  இத்தொழிற்துறையில் முன்னணி வகிப்பதோடு, மேலும் அதைப் பலப்படுத்திக் கொள்ளும் என்ற பன்முகத்தன்மை கொண்ட நோக்கத்துக்கு அளப்பரிய பெறுமதியை மொபிடெல்  சேர்த்திடும் என நம்புகிறோம்” என்றார். 

மொபிடெல் இன் பிரதான நிறைவேற்று அதிகாரியான நலின் பெரேரா கருத்துத் தெரிவிக்கையில்,  
‘பீபள்ஸ் இன்ஷுரன்ஸுக்கு அனைத்துத் தொடர்பாடல் வழிமுறைகளாலும் உதவி புரிந்திடுவதில் பெருமைப்படுகிறோம். அத்துடன் எமது புத்தாக்கம் மிக்க  தொடர்பாடல் தீர்வுகளை அவர்களது  வளர்ச்சிப் பயணத்தின் பங்காளராகத்  தேர்ந்தெடுத்ததற்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். பீபள்ஸ்  இன்ஷரன்ஸ், புகழ் பெற்றதொரு தாய் நிறுவனத்தின் துணையுடன்  இத்தொழிற்துறையையே மாற்றியமைக்கிறது. அதன் அனைத்து முக்கிய  பங்குதாரர்களுடனும் தொடர்பில் இருக்க காப்பீட்டாளருக்கு உறுதியான வழிகளில்  பெறுமதி சேர்க்கின்றோம். மொபிடெலின் முற்போக்கான அணுகுமுறை மற்றும் உயர்  தொழில்நுட்பத் தொடர்பாடல் தீர்வுகள், காப்பீட்டாளரின் எதிர்கால நோக்கத்தைப்  பூர்த்தி செய்யவும் உதவிடும்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .