2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

பீப்பள்ஸ் லீசிங் முன்னேற்றம்

Editorial   / 2019 ஜனவரி 09 , மு.ப. 11:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் வங்கிசாராத நிதியியல் துறையில் காணப்படும் மாபெரும் நிறுவனமாகவும், மக்கள் வங்கியின் துணை நிறுவனமாகவும் பீப்பள்ஸ் லீசிங் நிறுவனம் திகழ்கிறது.  

தொடர்ச்சியான மூன்றாவது ஆண்டாக (2017/18) காலப்பகுதிகான ‘பிஸ்னஸ் டுடே’ சிறந்த 30 நிறுவனங்களில் ஒன்றாக பீப்பள்ஸ் லீசிங் தெரிவாகியிருந்தது.   

இந்த முறை தரப்படுத்தலில், 13ஆவது இடத்தில் பீப்பள்ஸ் லீசிங் தரப்படுத்தப்பட்டிருந்தது.  
‘பிஸ்னஸ் டுடே’ சிறந்த 30 நிறுவனங்கள் தரப்படுத்தல் குறித்து அறிவிக்கும் நிகழ்வு கொழும்பு ஷங்கிரி-லா ஹோட்டலில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பங்குபற்றலுடன் நடைபெற்றது.  

கொழும்பு பங்குப்பரிவர்த்தனையில் வெளியிடப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில், ‘பிஸ்னஸ் டுடே’ சிறந்த 30 நிறுவனங்களின் தரப்படுத்தல் இடம்பெறுகிறது. ‘பிஸ்னஸ் டுடே’ சிறந்த 30 ஊடாக குறித்த ஆண்டில் உறுதியான பெறுபேறுகளை பதிவு செய்த நிறுவனங்கள், மாற்றமடையும் நிலைவரங்களுக்கேற்ப தமது செயற்பாடுகளை மேம்படுத்தியிருந்த நிறுவனங்கள் தெரிவு செய்யப்பட்டு கௌரவிக்கப்பட்டிருந்தன.  

பீப்பள்ஸ் லீசிங் நிர்வாகத்தின் சார்பாக பிரதம நிறைவேற்று அதிகாரியும் பொது முகாமையாளருமான சப்ரி இப்ரஹிம் இந்தக் கௌரவிப்பைப் பெற்றுக் கொண்டார். நிறுவனத்தின் கூட்டாண்மை நிர்வாக அணியினரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.  

இந்தத் தரப்படுத்தலில் பீப்பள்ஸ் லீசிங் முன்னேற்றத்தைப் பதிவு செய்திருந்ததனூடாக நிறுவனத்தின் வளர்ச்சி உறுதி செய்யப்பட்டுள்ளது.  

நிறுவனங்களின் தரப்படுத்தலின் போது, பங்குப் பெறுமதி, வருமானம், வரிக்குப் பிந்திய இலாபம், மூலதனத்தின் மீதான வருமானம், பங்கொன்றின் மீதான வருமானம், சந்தை மூலதனவாக்கம், பங்கு விலை, இதர பெறுமதிகள் போன்றன கவனத்தில் கொள்ளப்படுகின்றன.  

‘பிஸ்னஸ் டுடே’ சிறந்த 30 தரப்படுத்தலைப் பெற்றுக் கொண்டமை தொடர்பாக பீப்பள்ஸ் லீசிங் கம்பனியின் பிரதம நிறைவேற்று அதிகாரியும், பொது முகாமையாளருமான சப்ரி இப்ரஹிம் கருத்துத் தெரிவிக்கையில், “பிஸ்னஸ் டுடே சிறந்த 30 நிறுவனங்களில் ஒன்றாக பீப்பள்ஸ் லீசிங் 13ஆவது  இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளமை நிறுவனத்துக்கு பெருமை சேர்ப்பதாக அமைந்துள்ளது” எனக் குறிப்பிட்டார்.  

“முன்னைய ஆண்டு, ‘பிஸ்னஸ் டுடே’ சிறந்த 30 தரப்படுத்தலுடன் ஒப்பிடுகையில், தனது நிலையை முன்னேற்றியுள்ளதனூடாக நிறுவனத்தின் வளர்ச்சி புலப்படுகிறது. எனவே, எமது உறுதியான 2,500 ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் நிறுவனத்தின் நிதி உறுதித் தன்மை தொடர்பாகத் திருப்தி கொள்ளக்கூடியதாக இருக்கும்” என்றார்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .