2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

புதிய பரிணாமத்தில் INSEE Ecocyle

Editorial   / 2018 மே 25 , மு.ப. 12:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை கழிவு முகாமைத்துவம் தொடர்பில், பாரியளவு பிரச்சினைக்கு முகங்கொடுத்து வருகிறது. இதற்கு தீர்வாக INSEE சீமெந்தின் நிலைபேறான கழிவு முகாமைத்துவப் பிரிவான INSEE Ecocycle, சுமார் 15 வருடங்களாக கழிவு முகாமைத்துவத்தில் ஈடுபட்டு வருவதுடன், சர்வதேச ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட தொழில்நுட்பங்கள் மற்றும் முகாமைத்துவ அர்ப்பணிப்புகளை பகிர்ந்து, நாட்டின் அதிகளவு நாடப்படும் கழிவு முகாமைத்துவ சேவைகளை வழங்கும் நிறுவனமாகத் திகழ்கிறது.   

தனியொரு நிறுவனமாகத் திகழ்வதற்கான நடவடிக்கைகளை INSEE Ecocycle இவ்வாண்டில் மேற்கொண்டு வருகிறது. தேசிய கழிவு முகாமைத்துவத்துக்கு மேலும் பெருமளவு பங்களிப்பை வழங்கும் உத்தேசத்துடன் விஸ்தரிக்கப்படவுள்ள இந்நிறுவனமானது, தாய்லாந்தில் அமைந்துள்ள தனது தாய் நிறுவனமான INSEE Ecocycle இன் உலகத்தரம் வாய்ந்த வளங்களையும் இதற்காகப் பயன்படுத்துகிறது. அத்துடன் இலங்கையின் வியாபாரங்கள் மற்றும் சமூகங்களுக்கு “Ecocycle சூழல் தீர்வுகள்’ தமது சேவைகளை அர்ப்பணிப்புடன் வழங்கவுள்ளது. ஆய்வுகூட சேவைகள், பயிற்சி மற்றும் ஆலோசனைகள், தொழில்துறைசார் தூய்மையாக்கல்கள், விசேடத்துவமான சரக்குக் கையாளல் சேவை, அவசர பதிலளிப்பு சேவை, நச்சுக்கழிவு அகற்றல் மற்றும் பல சேவைகள் இதில் உள்ளடக்கப்படவுள்ளன.

இலங்கையில் காணப்படும் பரிபூரண தொழிற்துறைசார் கழிவு முகாமைத்துவத் தீர்வுகளை வழங்கும் ஒரே நிறுவனமாக INSEE Ecocycle திகழ்கிறது. 100,000 MT வருடாந்த திறனுடன், பொது மக்களுக்கும் தனியார்துறை நிறுவனங்களுக்கும் ஆபத்தான கழிவுகளை நிர்வகிப்பதற்கு, சூழலுக்கு நட்புறவான தீர்வுகளை வழங்குகிறது. அரசாங்க ஸ்தாபனங்கள் அடங்கலாக, 400க்கும் அதிகமான கூட்டாண்மை நிறுவனங்களுக்கு இந்தப் பங்களிப்பு வழங்கப்படுகிறது. 

இதுவரையில் இந்நிறுவனத்தால் 600,000 MT க்கும் அதிகமான தொழிற்துறைசார் கழிவு, சூழலுக்குப் பாதகமின்றி அழிக்கப்பட்டுள்ளது. அத்துடன், தனது திறனை மேம்படுத்தும் நோக்கோடு இவ்வாண்டில் INSEE Ecocycle இனால் 345 மில்லியன் ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதனூடாக 15 வருடங்களில் 1.3 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான தொகையைக் கழிவு முகாமைத்துவத்தில் இந்நிறுவனம் முதலீடு செய்துள்ளது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .