2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

பெயார்வே தேசிய இலக்கிய விருதுகள் - 2018

Editorial   / 2018 டிசெம்பர் 19 , பி.ப. 12:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெயார்வே தேசிய இலக்கிய விருதுகள், தொடர்ந்து நான்காவது வருடமாகவும் கோல் ஃபேஸ் ஹோட்டலில் அண்மையில் இடம்பெற்றது.

சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும், உள்நாட்டில் எழுதப்பட்ட சிறந்த நாவல்கள் இதன் போது வெளிக்கொணரப்பட்டன. ஓய்வு பெற்ற பேராசிரியர் ஜே.பி.திசாநாயக்க இந்த நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

இலங்கையின் கலை மற்றும் கலாசாரத்தை உள்நாட்டு திறமைசாலிகள், எழுத்தாளர்கள் மூலம் விருத்தியடையச் செய்வதே இந்த விருது வழங்கும் நிகழ்வின் நோக்கமாகும்.  

அருண பிரேமரத்னவின் ‘தரு விசுல றய’ சிங்களப் பிரிவின் வெற்றி நாவலாகவும், பெர்னான்டோ சீமன் பதிநாதனின் ‘தோற்றுப் போனவர்கள்’ தமிழ் பிரிவின் வெற்றி நாவலாகவும் தெரிவு செய்யப்பட்டன. ஆங்கிலப் பிரிவில் வெற்றி நாவல் அறிவிக்கப்படவில்லை.   

விருது வழங்கும் இந்த நிகழ்வை ஆரம்பித்ததன் மூலம், பெயார்வே ஹோல்டிங்ஸ் நிறுவனம் நாடு தழுவிய ரீதியில் புதிய எழுத்தாளர்களுக்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. இவ்வருடம் இதற்கென 120 நாவல்கள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன. அதில் இறுதியாக 14 நாவல்கள் தெரிவு செய்யப்பட்டன. நடுவர்களால் 05 சிங்கள நாவல்களும், 05 தமிழ் நாவல்களும் தெரிவு செய்யப்பட்டதோடு, 04 ஆங்கில நாவல்களும் தெரிவு செய்யப்பட்டன. தெரிவு செய்யப்பட்ட ஒவ்வொரு நாவலுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாய் பணப் பரிசாக வழங்கப்படும். வெற்றி பெறும் ஒவ்வொரு நாவலுக்கும் ஒவ்வொரு மொழியிலும் தலா ஐந்து இலட்சம் ரூபாய் பணப் பரிசாக வழங்கப்படும்.   

தமிழ் மொழியில் பிரமிலா பிரதீபனின் ‘கட்டுப்பொல்’, பெர்னாண்டோ சீமன் பத்திநாதனின் ‘தோற்றுப் போனவர்கள்’, முஸ்தீனின் ‘இரட்டைக் குளியல்’, நவயானி யோகேந்திரநாதனின் ‘இடிபடும் கோட்டைகள்’ மற்றும் ஏ.எம்.எஸ்.வேலாழகனின் ‘பனிச்சையடி முன்மாரியம் சட்டக்கிணறும்’ ஆகிய நாவல்கள் நடுவர்கள் குழுவினரான கலாநிதி பவித்ரா கைலாசபதி, திருமதி லரீனா அப்துல் ஹக், முரளீதரன் மயூரன் ஆகியோரால் தெரிவு செய்யப்பட்டன.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .