2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

பொல்கஹவெலயில் Pidilite தொழிற்சாலை

Editorial   / 2018 ஜூலை 20 , மு.ப. 03:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

Pidilite நிறுவனத்தின் நவீன உற்பத்திச்சாலை, வட மேல் மாகாணத்தில் உள்ள பொல்கஹவெலயில் அண்மையில் திறந்து வைக்கப்பட்டது. இந்தத் திறப்பு விழாவில், இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் தரன்ஜித் சிங் சந்து, Pidilite முகாமைத்துவப் பணிப்பாளர் பரத் பூரி, மெக்லறன்ஸ் குழுமத்தின் தலைவர் றொஹான் டி சில்வா ஆகியோர் கலந்து கொண்டனர்.  

இந்தப் புதிய உற்பத்தி நிலையம் திறந்து வைக்கப்படுவது பற்றி கருத்து வெளியிட்ட பரத் பூரி, “Pidilite இன் வியக்கத்தக்க இலங்கை விஜயம் 11 வருடங்களுக்கு முன் தொடங்கியது. இலங்கைச் சந்தையில் எமது அர்ப்பணிப்புக்கான ஒரு சான்றாக இந்த முதலீடு அமைந்துள்ளது. நான்கு ஏக்கர் நிலப் பரப்பில் அமைந்துள்ள இந்த இடத்தில், முதற் கட்டமாக பிசின்கள் உற்பத்தி செய்யப்படும். Fevicol என்ற பிரபலமான வியாபாரக் குறியீட்டின் கீழ், இது உற்பத்தி செய்யப்படும். இதைத் தொடர்ந்து கைத்தொழில் பிரிவில் இது மேம்படுத்தப்படும்” என்று கூறினார்.  

Pidilite லங்கா நிறுவனத்தின் பணிப்பாளர் திருமதி ரமணி பொன்னம்பலம் இது பற்றிக் கூறுகையில், “இந்தப் பிரிவின் இறக்குமதிக்கு இது கணிசமாக மாற்றீட்டுப் பங்களிப்பை வழங்குவதோடு, இந்தப் பிராந்தியத்தில் வேலை வாய்ப்பையும் அதிகரிக்கும்” என்று கூறினார். 

இலங்கையில் அதி உயர் தரம் மிக்க பிசினான Fevicol, Dr. FIXIT,  வீடுகளுக்கான ஆரோக்கியமான நீர்த் தடுப்புத் தீர்வு என்பன இலங்கையில் Pidilite இன் பிரபல உற்பத்திகளாக இருக்கின்றன. 2015இல் Pidilite லங்கா நிறுவனம் பலகைத் தொழில்துறை, காகிதாதிகள், கைத்தொழில் துறையில் மிகவும் பிரபலமான வெள்ளைப் பிசின் வகையான இலங்கை உற்பத்தியான Chemifix ஐ பொறுப்பேற்றது. இலங்கையில் வாடிக்கையாளர்களை மய்யப்படுத்திய மேலும் செயற்றிறன் மிக்க நிறுவனமாகத் திகழ வேண்டும் என்ற நிறுவனத்தின் ஆர்வத்தை வெளிப்படுத்தும் வகையிலேயே, அதன் செயற்பாடுகள் அமைந்துள்ளன.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X