2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மஞ்சி ‘வன் புக்’ ஊக்குவிப்புத் திட்டம்

Editorial   / 2019 ஜனவரி 18 , மு.ப. 11:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையிலுள்ள மாணவர்களிடையே வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் மஞ்சி, ‘வன் புக்’ ஊக்குவிப்பை நாடெங்கிலும் முன்னெடுக்க முன்வந்தது.  

இதன் தொடக்கமாக, சிலோன் பிஸ்கட் லிமிடெடின் முக்கிய வணிக நாமமான மஞ்சி பல்வேறு சேகரிப்பு மையங்களை நிறுவி மூன்று முக்கிய சேகரிப்பு முறைகளை நன்கொடையாளர்களுக்கு அறிமுகப்படுத்தியது.

அதற்கமைய 02 நடமாடும் சேகரிப்பு ஊர்திகள் நடமாடும் சேகரிப்பு நிலையமாக நாடெங்கிலும் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்பட்டது. முதலாவது மஞ்சி சேகரிப்பு ஊர்தி பண்டாரவளையில் தனது பயணத்தை ஆரம்பித்து பலாங்கொட, இரத்தினபுரி, ஹொரணை, பாணந்துறை, களுத்தறை, அம்பலங்கொட, காலி மற்றும் மாத்தறை ஆகிய பிரதேசங்களின் ஊடாக பயணித்தது.

இரண்டாவது ஊர்தி தனது பயணத்தை நுகேகொடையில் ஆரம்பித்து மஹரகம, கொட்டாவ, அவிசாவளை, கேகாலை, கண்டி, குருநாகல், நீர்க்கொழும்பு, கம்பஹா மற்றும் கிரிபத்கொட ஆகிய பகுதிகள் ஊடாக பயணித்தது.  

பிரதான புத்தக வெளியீட்டாளர்களான சரசவி புத்தக நிலையத்துடன் இணைந்து மஞ்சி நுகேகொட, கம்பஹா, கிரிபத்கொட, கண்டி, குருணாகல், இரத்தினபுரி, மாத்தறை, கொட்டாவ, மற்றும் தெஹிவளை ஆகிய பகுதிகளில் சரசவி புத்தக விற்பனை நிலையங்களில் சேகரிப்பு நிலையங்களை முன்னெடுத்திருந்தது.   

மேலும், புகையிரத திணைக்களத்துடன் இணைந்த மஞ்சி கொழும்பு கோட்டை, மருதானை, கம்பஹா, பொல்கஹவெல, கண்டி ஆகிய புகையிரத நிலையங்களிலும் சேகரிப்பு நிலையங்களை ஏற்படுத்தியது.

அத்துடன் நன்கொடையாளர்களின் வசதி கருதி சிலோன் பிஸ்கட் லிமிறெற்றின் பன்னிபிட்டிய மாக்கும்புர பிரதான அலுவலகத்திலும் சேகரிப்பு மையம் ஒன்று செயற்பட்டது. நிறுவன தலைவர், பணிப்பாளர் சபையினர், சிரேஷ்ட முகாமைத்துவ அங்கத்தவர்கள் மற்றும் ஊழியர்கள் பெரும் எண்ணிக்கையான புத்தகங்களை இங்கு நன்கொடையாக வழங்கியிருந்தனர்.   

புத்தகங்களின் சேகரிப்பு நிறைவு பெற்றதுடன், வன் புக் திட்டம் பிரிக்கப்பட்டு விநியோகம் செய்யும் அதன் இரண்டாம் கட்டத்திற்கு நகர்ந்தது. பிரிக்கப்பட்ட பின்னர் நாடெங்கிலும் உள்ள 50 பாடசாலைகளுக்கும் யாழ்ப்பாண தேசிய நூலகத்துக்கும் இந்தப் புத்தகங்கள் விநியோகிக்கப்பட்டன.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .