2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மலிபனின் யஹா போஷ தயாரிப்புக்கு SLS தரச்சான்றிதழ்

Editorial   / 2018 ஜனவரி 23 , மு.ப. 05:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

மலிபன் பிஸ்கட்ஸ் நிறுவனத்தின் பரிபூரண காலை ஆகாரமான ‘யஹா போஷ’ தயாரிப்புக்கு இலங்கை கட்டளைகள் நிறுவனத்தின் (SLSI) தரச்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.   

மலிபன் இல்லத்தின் புதிய புத்தாக்கமான தயாரிப்பாக ‘யஹா போஷ’ அமைந்துள்ளது. இந்த வர்த்தக நாமத்தில் காணப்படும் ‘யஹா’ எனப்படுவதன் மூலமாக பரிபூரணமான என்பது புலப்படுத்தப்பட்டுள்ளது. 

மலிபன் யஹா போஷ தயாரிப்பினால் சிறுவர்கள் மற்றும் வயது வந்தவர்கள் என அனைத்து பிரிவினருக்கும் ஆரோக்கியமான காலை உணவுத்தெரிவை பெற்றுக்கொள்ளலாம். அத்துடன், மாலை நேரம் தேநீருடன் உள்ளெடுக்கும் சிற்றுண்டியாகக் கூட இதைப் பயன்படுத்தலாம். 

ஆறு தசாப்தங்களுக்கு மேலாக, மலிபன் இல்லம் இலங்கையர்கள் மத்தியில் அதிகளவு நன்மதிப்பையும் வரவேற்பையும் பெற்ற வர்த்தக நாமமாகத் திகழ்கிறது.

சிறந்த தயாரிப்புகளை அறிமுகம் செய்வதனூடாக வாடிக்கையாளர்களைப் பரவசத்தில் ஆழ்த்துவதுடன், புத்தாக்கமான பிஸ்கட்களை அறிமுகம் செய்வதுடன், அவற்றை உயர் தரத்திலும் சுவையில் நிகரற்றதாகவும் பேணுகிறது. நாடு முழுவதிலும் உறுதியான பரந்த விநியோகத்தை வர்த்தக நாமம் கொண்டுள்ளது.

35 நாடுகளில் சந்தைவாய்ப்பைக் கொண்டுள்ள மலிபன், சர்வதேச விநியோக வலையமைப்பில் உறுதியான நன்மதிப்பையும் பெற்றுள்ளது.  

இந்தப் பெருமைக்குரிய சான்றிதழை பெற்றுக்கொண்டமை தொடர்பில் குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ரவி ஜயவர்தன கருத்துத்தெரிவிக்கையில், “மலிபன் ‘யஹா போஷ’ தயாரிப்பினால் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சுவை வழங்கப்படுவதுடன், ஆரோக்கியமான தயாரிப்பாக உயர் தரங்களுக்கமைய உற்பத்தி செய்யப்படுகிறது.

இளம் தலைமுறையினருக்குத் தமது போஷாக்கு இலக்குகளை எய்துவதற்கு உதவுவதாக அமைந்துள்ளதுடன், சிறந்த ஆரோக்கியத்துக்கு பெறுமதியையும் சேர்க்கிறது” என்றார்.  

செயற்கை இரசாயனப் பொருட்கள் அற்றது என்பதுடன், ‘யஹா போஷ’வில் செயற்கை வர்ணங்கள், செயற்கை சுவையூட்டிகள் அல்லது பதப்படுத்திகள் போன்றன சேர்க்கப்படவில்லை. இந்தத் தயாரிப்பில் போஷாக்கு நிறைந்த சோளம், சோயா, பயறு, அரிசி, விற்றமின் மற்றும் தாதுப்பொருட்கள் போன்றன உள்ளடங்கி ஆரோக்கியம் பேணுகின்றது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .