2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மல்டிலெக்கின் ஈய பாதுகாப்பு வாரம்

Editorial   / 2018 நவம்பர் 15 , பி.ப. 05:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

மெக்சன்ஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் முன்னணி பெயின்ட் நாமமான மல்டிலெக், சர்வதேச ஈய நஞ்சு தவிர்ப்பு வார (ILPPW) செயற்பாடுகளில் பங்கேற்றிருந்தது. இந்தச் செயற்பாடுகள் 2018 ஒக்டோபர் 21 முதல் 27 வரை முன்னெடுக்கப்பட்டிருந்தது. ஈய பாதுகாப்பு வாரத்தினூடாக நிறுவனங்களுக்கும் ஸ்தாபனங்களுக்கும் ஈய நஞ்சாக்கத்திலிருந்து பாதுகாப்பான செயற்பாடுகளில் கவனம் செலுத்த ஊக்குவிப்பதாக அமைந்திருந்தது.

வருடாந்தம் முன்னெடுக்கப்படும் இந்தச் செயற்பாடுகளில் மூன்றாவது தொடர்ச்சியான வாரமாக இது அமைந்திருந்தது. இந்த ஆண்டின் ILPPW இன் தொனிப்பொருளாக தனிநபர்கள், சிவில் சமூகங்கள் மற்றும் தொழிற்றுறைகள் மற்றும் அரசாங்கங்களுக்கு ஒன்றிணைந்து செயலாற்றி ஈயம் கலந்த பெயின்ட் வகைகளை தடை செய்வது என்பது அமைந்திருந்தது.   

மெக்சன்ஸ் பெயின்ட்ஸ் பிரதம நிறைவேற்று அதிகாரி இஸ்மைல் ஹுஸைன் கருத்துத் தெரிவிக்கையில், “ஈய பாதுகாப்பு சான்றிதழை பெற்றுக் கொள்வதற்கு நாட்டின் பல முன்னணி நிறுவனங்கள் எமது வழிமுறையை பின்பற்றுகின்றனர் என்பதையிட்டு நாம் மிகவும் பெருமை கொள்கிறோம். ஈய பாதுகாப்பான நிறுவனம் எனும் நிலையை பெற்றுக் கொண்ட இலங்கையின் முதலாவது நிறுவனம் மல்டிலெக் என்பதுடன், தெற்காசிய பிராந்தியத்தில் இந்த உறுதிப்படுத்தலை IPEN அமெரிக்காவிடமிருந்து பெற்றுக் கொண்ட முதலாவது நிறுவனம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இது சிறந்த சாதனையாகும், இந்த சான்றிதழை பெற்றுக் கொண்ட உலகின் ஏனைய இரு நிறுவனங்களுடன் நாமும் காணப்படுகிறோம். தெற்காசிய பிராந்தியத்தில் முன்னோடியாக திகழ்வதையிட்டு நாம் பெருமை கொள்வதுடன், எம்மை மேலும் பல நிறுவனங்கள் பின்தொடரும் என எதிர்பார்க்கிறோம்” என்றார்.  

இந்த ஆண்டின் ஈய பாதுகாப்பு வார நடவடிக்கைகள் தெஹியத்தகண்டிய பகுதியில் முன்னெடுக்கப்பட்டிருந்தது. தேசிய அமைப்பான சூழல் நீதிக்கான மையத்தினால் முன்னெடுக்கப்பட்ட ஆய்வினூடாக, இந்தப் பிரதேசத்தில் அதிகளவு ஈய சேர்மானங்கள் காணப்படுவதாக இனங்காணப்பட்டிருந்தது. இந்த பிரதேசத்தைச் சேர்ந்த 15 முன்பள்ளிகளுக்கு ஈய பாதுகாப்பான பெயின்ட்களை மல்டிலெக் வழங்கியிருந்தது.இதனூடாக ஈய பாதுகாப்பான பெயின்ட் வகையின் பயன்பாட்டின் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டிருந்தது. சூழல் நீதிக்கான மையத்தின் சிரேஷ்ட சூழல் அதிகாரி சலனி ரூபசிங்க கருத்துத் தெரிவிக்கையில், “ஈய பாதுகாப்பான பெயின்ட் வகையை பயன்படுத்துவதன் முக்கியத்துவம் தொடர்பில் பொது மக்களுக்கு விழிப்புணர்வை மெக்சன்ஸ் ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக பிரதேசத்தைச் சேர்ந்த சிறுவர்கள் மத்தியில் இந்த விழிப்புணர்வு அதிகளவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அவர்களின் முயற்சிகள் மிகவும் பாராட்டுதலுக்குரியது என்பதுடன், நடைமுறைச் சாத்தியமானதாகவும், தூர நோக்குடையதாகவும் அமைந்துள்ளது” என்றார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .