2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

மாஹோவில் ‘SDB திவி சவிய’ பயிற்சிப்பட்டறை

Editorial   / 2018 ஜனவரி 31 , பி.ப. 12:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஓய்வூதியம்பெறுபவர்களை வருமானம் ஈட்டும் செயற்திட்டங்களை ஆரம்பிப்பதில் ஈடுபடுத்தவும், அவர்களை இலங்கையின் உழைக்கும் படையில் மீண்டும் இணைத்துக்கொள்ளவும் ஏற்பாடு செய்யும் நோக்கத்துடன் ‘SDB திவி சவிய’ தொழில் முயற்சியாளர்களுக்கான பயிற்சிப்பட்டறை அண்மையில், அஹடுவெவ பண்டாரநாயக்க மத்திய மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.

இதன்போது அவர்களின் அணுகுமுறையை விருத்தி செய்து வியாபாரங்களை ஆரம்பித்து முன்னடத்திச்செல்வதற்கான ஊக்குவிப்பும் நிதியுதவியும் வழங்கப்பட்டிருந்தது.  

நிகழ்ச்சியின் போது, விசேட அறிவுரைகள் முன்னெடுக்கப்பட்டிருந்ததுடன், தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகாரசபை மூலம் வியாபாரங்களை ஆரம்பித்து முன்னடத்திச்செல்வதற்கான தொழில்நுட்ப மற்றும் திறன் விருத்தி பற்றி விளக்கங்களும் வழங்கப்பட்டன.

அதேபோல் SDB வங்கியின் சேவைகளில் அவர்களுக்கு பொருத்தமான கடன் மற்றும் கடனைப் பெறும் முறையும், வங்கியால் அவர்களுக்காக வழங்கப்படும் மற்றைய சேவைகள் பற்றியும் விளக்கங்கள் வழங்கப்பட்டிருந்தன.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .