2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

முதல் காலாண்டில் காப்புறுதி வியாபாரங்கள் வளர்ச்சி

Editorial   / 2019 ஓகஸ்ட் 13 , பி.ப. 06:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடப்பு ஆண்டின் முதல் காலாண்டில் காப்புறுதித்துறையின் நிகர காப்புறுதி தவணைக்கட்டண பெறுமதி (GWP) 5.7 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்திருந்தது. 2018ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில், 2,504 மில்லியன் ரூபாய் அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக, இலங்கை காப்புறுதி ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.   

2019 மார்ச் 31ஆம் திகதியுடன் நிறைவடைந்த காலப்பகுதிக்கான நீண்ட கால காப்புறுதி, பொது காப்புறுதி வியாபாரங்களின் நிகர காப்புறுதி தவணைக்கட்டண பெறுமதி (GWP) 46,429 மில்லியன் ரூபாயாக பதிவாகியிருந்தது. இது 2018ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் ரூ. 43,925 மில்லியனாக பதிவாகியிருந்தது.   

நீண்ட கால காப்புறுதி வியாபாரத்தின் நிகர காப்புறுதி தவணைக்கட்டண பெறுமதி (GWP) ரூ. 20,414 மில்லியனாக பதிவாகியிருந்தது. பொது காப்புறுதி வியாபாரத்தின் நிகர காப்புறுதி தவணைக்கட்டண பெறுமதி (GWP) ரூ. 25,307 மில்லியனாக பதிவாகியிருந்தது.   

இதனூடாக முன்னைய ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில், நீண்ட கால காப்புறுதி வியாபாரம், பொது காப்புறுதி வியாபாரம் ஆகியவற்றின் நிகர காப்புறுதி தவணைக்கட்டண பெறுமதி (GWP)வளர்ச்சி 9.64 சதவீதமாகவும் 2.80 சதவீதமாகவும் பதிவாகியிருந்தது.   

மார்ச் மாதம் 31ஆம் திகதியன்று காப்புறுதி நிறுவனங்களின் மொத்த சொத்துக்களின் பெறுமதி ரூ. 628,430 மில்லியனாக பதிவாகியிருந்தது. இது கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியில் ரூ. 574,112 மில்லியனாக பதிவாகியிருந்தது. கூட்டாண்மை கடன்கள், வைப்புகள், மீள்காப்புறுதி கிடைப்பனவுகள் போன்றன காரணமாக 9.46 சதவீத அதிகரிப்பை பதிவு செய்திருந்தது.   

நீண்ட கால காப்புறுதி நிறுவனங்களின் சொத்துக்கள் ரூ. 442,853 மில்லியனாக பதிவாகியிருந்தது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 10.52 சதவீத வளர்ச்சியை பதிவு செய்திருந்தது.   

பொது காப்புறுதி வியாபார சொத்துக்களின் பெறுமதி ரூ. 185,577 மில்லியனாக பதிவாகியிருந்தது. இது 7.03 சதவீத வளர்ச்சியாகும்.   

2019 முதல் காலாண்டு நிறைவில், அரசாங்க பிணை முறைகளில் மேற்கொள்ளப்பட்ட முதலீடு ரூ. 178,624 மில்லியனாக பதிவாகியிருந்தது. இதில் நீண்ட கால காப்புறுதி வியாபாரங்களின் பங்களிப்பு 45.25 சதவீதமாக பதிவாகியிருந்ததுடன், பொது காப்புறுதி வியாபாரத்தின் பங்களிப்பு 37.07 சதவீதமாக பதிவாகியிருந்தது.   

நீண்ட கால காப்புறுதி வியாபாரம் மற்றும் பொது காப்புறுதி வியாபாரம் ஆகியவற்றைச் சேர்ந்த நிறுவனங்களினால் வழங்கப்பட்ட மொத்த நஷ்டஈடுகளின் பெறுமதி ரூ. 21,528 மில்லியனாக பதிவாகியீருந்தது. இது முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 16.41 சதவீத அதிகரிப்பை பதிவு செய்திருந்தது. நீண்ட கால காப்புறுதி நஷ்டஈடுகள், முதிர்வு பெறுமதிகள், மரண அனுகூலங்கள் போன்றன ரூ. 9,522 மில்லியனாக பதிவாகியிருந்தது.   

பொது காப்புறுதி துறையில் பதிவாகியிருந்த நஷ்டஈடுகளில் மோட்டார், தீ, கப்பல் போக்குவரத்து மற்றும் இதர பிரிவுகள் போன்றன அடங்கியுள்ளன. இவற்றின் பெறுமதி ரூ. 12006 மில்லியனாகும். எனவே, முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2019 முதல் காலாண்டில், நீண்ட கால காப்புறுதி மற்றும் பொது காப்புறுதி வியாபாரத்தின் நஷ்டஈடு கோரல் பெறுமதி முறையே 24.17 சதவீதம் மற்றும் 10.92 சதவீத அதிகரிப்பாகும்.   

நீண்ட கால காப்புறுதி வியாபாரத்துக்கான வரிக்கு முந்திய இலாபம் ரூ. 4,113 மில்லியனாக பதிவாகியிருந்தது. பொது காப்புறுதி வியாபாரத்தின் வரிக்கு முந்திய இலாபம் ரூ. 1,671 மில்லியனாக பதிவாகியிருந்தது. முன்னைய ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் இந்த இரு வியாபார பிரிவுகளின் இலாபம் முறையே 73.49 சதவீதம் மற்றும் 28.53 சதவீதம் குறைந்திருந்தது. ஆயுள் வியாபாரத்தின் வரிக்கு முந்திய இலாபம் 2019 முதல் காலாண்டில் பெருமளவு குறைந்திருந்தது.   

பதிவு செய்யப்பட்ட 25 காப்புறுதி நிறுவனங்களில் 12 நிறுவனங்கள் நீண்ட கால காப்புறுதி (ஆயுள்) வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளதுடன், 11 நிறுவனங்கள் பொது காப்புறுதி வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளன. இரண்டு நிறுவனங்கள் இரு சேவைகளையும் வழங்குகின்றன.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .