2024 மார்ச் 28, வியாழக்கிழமை

முதல் தர வர்த்தக நாமமாக பீப்பள்ஸ் லீசிங் தெரிவு

Editorial   / 2018 ஏப்ரல் 19 , பி.ப. 12:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசத்தின் வங்கிசாராத நிதிச்சேவைகளை வழங்கும் நிறுவனங்களில் பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பிஎல்சி கொண்டுள்ள உயர்ந்த ஸ்தானத்தை, மேலும் உறுதி செய்யும் வகையில், 2018 ஆம் ஆண்டில் வங்கிசாரா நிதிச்சேவைகளை வழங்கும் துறையைச் சேர்ந்த முதல் தர வர்த்தக நாமமாகத் தரப்படுத்தப்பட்டுள்ளது.

‘பிரான்ட் பினான்ஸ் விருதுகள் 2018’ நிகழ்வின்போது, இந்த உயர் கௌரவத்தை பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டிருந்தது.  

மேலும், நாட்டின் வங்கிசாரா நிதியியல் சேவைகளை வழங்கும் துறையில் ‘மிகவும் பெறுமதி வாய்ந்த நுகர்வோர் வர்த்தக நாமம்’ எனும் நிலையை பீப்பள்ஸ் லீசிங் தனதாக்கியிருந்தது.  

இந்த விருதுகள் 2018ஆம் ஆண்டுக்கான நாட்டின் சிறந்த ‘100 பிரான்ட் பினான்ஸ்’ நிறுவனங்களைத் தரப்படுத்தும் நிகழ்வின்போது, வழங்கப்பட்டிருந்தது.

உள்நாட்டு சுயாதீன வர்த்தக நாம மதிப்பீட்டு மற்றும் தரப்படுத்தல் நிறுவனங்களில் ஒன்றான பிரான்ட் பினான்ஸ் லங்கா கௌரவிக்கப்படுவதுடன், தொடர்ச்சியாக 15 ஆண்டுகளாக பரிபூரண ஆய்வுகளை முன்னெடுத்து, பிரதான துறைகளில் வர்த்தக நாமங்களின் வினைத்திறன் அடிப்படையில் அவற்றை தரப்படுத்தி வருகிறது. இது வருடாந்தம் பெருமளவில் எதிர்பார்க்கப்படும் நிகழ்வாக அமைந்துள்ளது.  

இலங்கையின் பெறுமதி வாய்ந்த வர்த்தக நாமங்கள், அதனுடன் தொடர்புடைய தரப்படுத்தல்கள் போன்றன பிரான்ட் பினான்ஸ் லங்காவால் வருடாந்தம் சுயாதீனமாகவும், பக்கசார்பற்ற முறையிலும் மேற்கொள்ளப்படுகிறது.

பெருமளவானவர்கள் மத்தியில் சந்தை ஆய்வுகள் முன்னெடுக்கப்படுவதுடன், கொழும்பு பங்குச் சந்தையினால் வெளியிடப்படும் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் நிதித்தரவுகளின் அடிப்படையிலும், இதர தரவுகள் மற்றும் தகவல்கள் போன்றவற்றின் அடிப்படையிலும் இந்தத் தரப்படுத்தல்களுக்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.   

இந்த விருதுகளைப் பெற்றுக் கொண்டமை தொடர்பில், PLC சந்தைப்படுத்தல் மற்றும் வியாபார அபிவிருத்தி செயற்பாடுகளுக்கான பதில் பொது முகாமையாளர் லக்சந்த குணவர்தன கருத்துத் தெரிவிக்கையில், “சுயாதீனமான வர்த்தக நாம தரப்படுத்தல்களை வெளியிடும் பிரான்ட் பினான்ஸ் லங்கா என்பது, உள்நாட்டில் நன்மதிப்பைப் பெற்ற நிறுவனமாகத் திகழ்கிறது. வங்கிசாரா நிதியியல் துறையில், ‘மிகவும் பெறுமதி வாய்ந்த, உறுதியான வர்த்தக நாமம்’ எனும் விருதைப் பெறுவது சாதனையாகும். எமது அர்ப்பணிப்பு, வாடிக்கையாளர்களுடன் உறுதியான உறவு, இலங்கையர்களுக்கு வழங்கப்பட்டிருந்த உயர் தரச் சேவை போன்றன, இந்த உயர்தர கௌரவிப்பைப் பெற்றுக் கொள்ள ஏதுவாக அமைந்துள்ளன” என்றார்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X