2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

மெல்பன் உருக்கு கம்பிகளுக்கு தரச்சான்றிதழ்

Editorial   / 2019 ஜனவரி 01 , மு.ப. 11:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

மெல்பன் உருக்குக் கம்பிகளுக்காக முதன்முறையாக ISO-14001-2015 சூழல் முகாமைத்துவ முறைமை தரச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. சூழலுக்கு பாதிப்பின்றி உருக்குக் கம்பனிகளை நீண்டகாலமாக உற்பத்தி செய்து வரும் நிலையில் இந்தச் சூழல் தரச்சான்றிதழ் வழங்கப்பட்டிருப்பது தங்களுக்கு மேலும் ஊக்கமளிப்பதாக, மெல்பன் மெடல் நிறுவன பிரதம நிறைவேற்று அதிகாரி றம்ஸி அமானுள்ளா தெரிவித்தார்.  

இது தொடர்பான தரச்சான்றிதழை இலங்கைத் தர நிர்ணய சபைப் பணிப்பாளர் நாயகர் சித்திகா ஜி செனவிரத்ன வழங்கி வைத்தார்.  சூழல் முகாமைத்துவ தரச்சான்றிதழ் வழங்கப்படுவதற்கு முன்பிருந்தே, கடந்த 20 வருடங்களாக சூழலுக்கு பாதிப்பில்லாத வகையில் சிறந்த உருக்குக் கம்பிளை உற்பத்தி செய்து வரும் நிலையில், இந்த அங்கிகாரம் கிடைத்துள்ளதாக, மெல்பன் தர முகாமையாளர் ரசிக குலரத்ன குறிப்பிட்டார். விரைவில் சக்தி முகாமைத்துவ முறைமை தரச் சான்றிதழும் கிடைக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.  

சக்தியை விரயமாக்காது, உற்பத்திச் செயற்பாடுகளை முன்னெடுப்பதால் இந்தச் தரச்சான்றிதழ் பெற விண்ணப்பம் செய்யப்பட்டுள்ள அதேவேளை, மேசன்களுக்கு 500 வீடுகள் கட்டிக் கொடுக்கும் திட்டம் அடங்கலான சமூக சேவைப் பணிகளிலும் மெல்பன் நிறுவனம் ஈடுபட்டு வரும் நிலையில், அது தொடர்பான சான்றிதழ் பெறவும் விண்ணப்பித்துள்ளதாகவும் குலரத்ன கூறினார்.  

450 இற்கும் அதிகமான ஊழியர்களைக் கொண்ட மெல்பன் நிறுவனம், அவர்களின் சுகாதாரம், பாதுகாப்பு தொடர்பில் அதிக கவனம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .