2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

மொபிடெல் Google I/O extended Sri Lanka 2019

Editorial   / 2019 மே 30 , பி.ப. 06:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொபிடெல் வலுவூட்டலில், இந்த ஆண்டின் Google I/O extended Sri Lanka 2019 நிகழ்வு, ஸ்டெய்ன் ஸ்ரூடியோஸில் அண்மையில் இடம்பெற்றது. கடந்த ஆண்டு வெற்றிகரமாக இடம்பெற்ற நிகழ்வுகளைத் தொடர்ந்து, இம்முறையும் இந்நிகழ்வு வெற்றிகரமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த ஆண்டின் மொபிடெல் Google I/O Extended Sri Lanka நிகழ்வு, நேரடியான ஒன்லைன் மூலமான நிகழ்வாக அமைந்திருந்தது. நிகழ்வின் ரசிகர்களை ஏமாற்றாத வகையிலும், அதேவேளையில் பங்கேற்போரின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், இந்தக் கடுமையானத் தீர்மானத்தை மொபிடெல் மேற்கொண்டிருந்தது.

மொபிடெல் இனோவேஷன் சென்ரரின் உத்வேகத்துடனான அணியினர், கடுமையாக உழைத்து மொபிடெல் Google I/O 2019 Extended நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர்.  Google IO Extended நிகழ்வு, அடுத்த தலைமுறை தொழில்நுட்பத்தின் மீது கவனம் செலுத்தி, நேரலை நிகழ்வாக முன்னெடுக்கப்பட்டிருந்தது. இந்நிகழ்வு YouTube, Facebook Channels, PEO TV இல் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

தொழில்நுட்ப ரீதியில் பார்வையாளர்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் மொபிடெல் பல நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருந்தது. இதில் 5G, பசுமையான எதிர்காலத்துக்கு தொழில்நுட்பம், Island Mentality VS Startup Mentality, இலங்கையின் ஆரம்ப நிலை நிறுவன கட்டமைப்பைச் சேர்ந்த பிரதான நபர்களுடனான கலந்துரையாடல் அமர்வு போன்றன அடங்கியிருந்தன.

கட்டிளம்பராயத்தைச் சேர்ந்தவர்களுக்கான “Sri Lankan Whizz-Kids” எனும் தலைப்பில் குழுநிலை கலந்துரையாடல் அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருந்தது. இந்த நிகழ்வில் “Your Gateway to the Digital World” எனும் தலைப்பில் மொபிடெலின் புதிய டிஜிட்டல் சேவை கட்டமைப்பான “mSpace” பற்றிய விளக்கங்களும் அடங்கியிருந்தன.

பொறுப்பு வாய்ந்த கூட்டாண்மை நிறுவனமும் தேசிய மொபைல் சேவை வழங்குநர் எனும் வகையிலும் மொபிடெல், நாட்டில் நிலவும் அவசரகால சூழ்நிலையை கவனத்தில் கொண்டு இந்த ஆண்டு நிகழ்வில் களிப்பூட்டும் நிகழ்வுகள் எதனையும் உள்ளடக்கியிருக்கவில்லை.

தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப நிபுணர்கள், துறைசார் முன்னோடிகள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் இளம் தொழில்நுட்ப புத்தாக்கவல்லுநர்கள் ஆகியோர் மத்தியில் இந்நிகழ்வு வருடாந்தம் பெருமளவு வெற்றிகரமாக அமைந்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X