2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

மொபிடெல் காஷ் பொனான்ஸா ‘சீசன் - 2’ வெற்றியாளருக்கு புதிய மொன்டெரோ

Editorial   / 2017 நவம்பர் 08 , மு.ப. 03:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மொபிடெல் முன்னெடுக்கும் காஷ் பொனான்ஸா மொன்டெரோ அதிர்ஷ்ட செயற்றிட்டம் 2017இல், செப்டெம்பர் மாத வெற்றியாளராக காலியைச் சேர்ந்த G. H. A. தமயந்தி தெரிவு செய்யப்பட்டார். மொபிடெலின் சிரேஷ்ட பொது முகாமையாளர் - சந்தைப்படுத்தல் - இசுறு திசாநாயக, மொபிடெலின் சிரேஷ்ட பொது முகாமையாளர் - விற்பனை மற்றும் வலைபின்னல் - சந்திக விதாரன ஆகியோர் வெற்றியாளருக்கு பரிசுகளை வழங்கினர். இவ்விருது வழங்கும் வைபவம் அண்மையில் பேருவளை, கலவிலவத்த மைதானத்தில் நடைபெற்றது. இதன் போது, மொபிடெலின் களியாட்டக் கொண்டாட்டம் மற்றும் ஃப்ளாஷ் பெக் இசைக் குழுவின் இசை நிகழ்ச்சியும் இடம்பெற்றது. 

2017ஆம் ஆண்டின் மீதமுள்ள மாதங்களுக்கும் மேலும் 3 சொகுசு மொன்டெரோ வாகனங்களை மொபிடெல் வழங்கவுள்ளது. இச் செயற்திட்டத்தின் மூலம் 12 வெற்றியாளர்களுக்கு மாதம் ஒரு சொகுசு மொன்டெரோ வீதம் 12 மாதங்களுக்கு வழங்கவுள்ளது. இதற்கு மேலாதிகமாக மொபிடெல் ஒவ்வொருவருக்கும் ரூ.500 ஐ பணப்பரிசாக வழங்குகிறது. வருடம் முழுவதும் மொத்தம் 219,000 அதிர்ஷ்ட வெற்றியாளர்களுக்கு வழங்கப்படுகிறது. சேவை வழங்குனரிடமிருந்து முழுவதுமாக ரூ. 350 மில்லியன் தொகையை மொபிடெல் வாடிக்கையாளர்கள் 2017ஆம் ஆண்டு முழுவதும் பெற்றுக் கொள்ள எதிர்ப்பார்க்க முடியும். செப்டெம்பர் மாத வெற்றியாளருக்கு பெறுமதிமிக்க மொன்டெரொவுக்கு மேலதிகமாக செப்டெம்பர் 2017 வரை ரூ. 279 மில்லியன் பெறுமதியான பரிசுகள் மொத்தமாக 163,809 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. 

இந்த பரிசு பகிர்ந்தளிக்கும் நிகழ்வில், குழந்தைகள் பொழுது போக்கு விளையாட்டுக்கள் உட்பட பல நிகழ்வுகள் இடம்பெற்றன. அது மட்டுமல்லாது சிறப்பு சலுகைகளாக உபஹார திறன்பேசி சலுகைகள் மற்றும் பரிசுப் பொருட்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டது. ஒரு விளையாட்டு வளையம் ஊடாக மொபிடெல் புரோட்பான்ட் மூலம் பொழுது போக்கு விளையாட்டுக்கள் வாடிக்கையாளர்களுக்கு புது அனுபவமாக வழங்கப்பட்டது. அந்நாளில் அதனைத் தொடர்ந்து வாடிக்கையாளர்களுக்கான சிறப்பு மருத்துவ சிகிச்சைக்கு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. அதில் அனுபவமிக்க கண் மருத்துவர்களால் கண் பரிசோதனை செய்யப்பட்டு 1000 மூக்குக் கண்ணாடிகளும் இலவசமாக வழங்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .