2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

மொபிடெல், கூகுள் இணைந்து ‘Women Will’ பயிற்சிப்பட்டறை முன்னெடுப்பு

Editorial   / 2018 நவம்பர் 20 , பி.ப. 11:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொபிடெல் அண்மையில் கொழும்பில் கூகுள் பிஸ்னஸ் குரூப் உடன் அதன் பெண்கள் பகுதி சில்லறை வணிக வலையமைப்புக்கு ‘WomenWill’ செயற்றிட்டத்தை அறிமுகப்படுத்த பங்காளராகக் கைக்கோர்த்திருந்தது.

ஒரு முழுநாள் செயலமர்வு, மொபிடெல் இனோவேஷன் சென்டரில் நடைபெற்றது. ‘Womenwill’, கூகுளினால் ஆரம்பிக்கப்பட்ட ஒரு முயற்சியாகும். இது பெண்களுக்கு சகல இடங்களிலும் வாய்ப்புகளை உருவாக்குவதன் ஊடாக அவர்கள் வளர்ச்சி அடைந்து வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் உருவாக்கப்பட்டது.

இணைக்கப்பட்ட பெண்கள் முயற்சியின் உறுதியான அங்கத்தவராக மொபிடெல், இலங்கையின் பெண்களுக்கு டிஜிட்டல் வளர்ச்சியை வேகப்படுத்தல், நிதி ஒதுக்கீடு போன்றவற்றைக் கொண்டு நடத்தவும் அவர்களுக்கு ஆதரவு வழங்கப் பல்வேறு செயற்றிட்டங்களையும் செயற்படுத்துகின்றன.  

இந்துலேகா நாணயக்கார - WomenWill இலங்கை, இணை முகாமையாளர் -GBG, சஜினி ஜெயவர்தன கூகுள் பிஸ்னஸ் கொமியுனிட்டி, தனுஷிக்கி பெரேரா - இணை முகாமையாளர், பயற்சியாளர் GBG கொழும்பு ஆகியோரால் நுண்ணறிவுசார் பயிற்சிப்பட்டறை நடாத்தப்பட்டது.

பயிற்சிப்பட்டறையானது, டிஜிட்டல் தலைமைத்துவம், முயற்சியாண்மை திறன்கள், வேலைப்பளு - வாழ்க்கை என்பவற்றை சமப்படுத்தல், பெண்கள் தொழில்நுட்பங்களின் பயன்பாட்டை அதிகரிக்க உதவுதல், கவர்ந்திழுத்தல், இணைந்திருத்தல் ஊடாக அவர்களின் வியாபாரத்தை மேம்படுத்தல் என்பவற்றை நோக்காக கொண்டு நடத்தப்பட்டது.

பயிற்சிபட்டறையானது, apps உடன் கைகளிலான அனுபவம் கலந்துரையாடல், ஐஸ் பிரேக்கர் பகுதிகள் போன்ற குழு செயற்பாடுகளை உள்ளடக்கி இருந்தது.

பயிற்சிப்பட்டறையின் முடிவாக பங்குபற்றிய சகலருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. பங்குபற்றியவர்கள் வழங்கிய பின்னூட்டங்கள் மிகவும் நேர்மறையாகவே இருந்தன.

பட்டறையானது உண்மையாகவே அவர்களின் தனிப்பட்ட, தொழிற்றுறை வாழ்வாதாரங்களை மேம்படுத்துவதாக அமைந்தமையால் அவர்களுக்கு அது பெறுமதி வாய்ந்ததாக இருந்தது.

இப்பயிற்சிப் பட்டறை வெற்றிகரமாக நடந்தமையால் எதிர்வரும் மாதங்களில் இதுபோன்ற செயற்திட்டங்களை வெவ்வேறு மாவட்டங்களில் நடத்த மொபிடெல் திட்டமிட்டுள்ளது.  

மொபிடெல் இம்முயற்சியில் இணைந்து கொண்டமைக்கான காரணம், ஒரு பயிற்றப்பட்ட பெண் சில்லறை விற்பனையாளரை உருவாக்குவது, மொபிடெலுக்கு பயன்தக்க வகையில் மொபிடெலின் பொருட்கள்,  சேவைகள் தொடர்பாகக் கற்பிக்கக் கூடிய புதிய பெண் வாடிக்கையாளர்களை இனம் காணக் கூடியவாறு இருக்கும் என்ற நம்பிக்கை இருந்தமையால் ஆகும்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .