2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

யூனியன் அஷ்யூரன்ஸ் “லைஃவ்ஸ்டைல் போனஸ் 2021” ஐ அறிமுகம்

J.A. George   / 2021 ஜனவரி 12 , பி.ப. 03:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜோன் கீல்ஸ் குழுமத்தின் துணை நிறுவனமான யூனியன் அஷ்யூரன்ஸ் பிஎல்சி, “லைஃவ்ஸ்டைல் போனஸ் 2021” எனும் பிரச்சாரத் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

வாடிக்கையாளர்களுக்கு ஸ்மார்ட்டான் வாழ்க்கை முறையை முன்னெடுப்பதற்கு அவசியமான நவீன ஸ்மார்ட் சாதனங்களை வெற்றியீட்டுவதற்கு வாய்ப்புகளை வழங்குவதுடன், தமது பங்காளர் வலையமைப்பிலிருந்து பெருமளவு தொடர் விலைக்கழிவுகளை பெற்றுக் கொள்ளும் வாய்ப்பை வழங்குவதாகவும் அமைந்துள்ளது.

அதிர்ஷ்டசாலி வெற்றியாளர் தெரிவு மற்றும் பங்காளர் வர்த்தக நாமங்களினால் வழங்கப்படும் பெருமளவு சலுகைகள் அடங்கலான இந்தத் திட்டம் ஜனவரி 4ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

மாதாந்தம் ஆகக்குறைந்தது 15000 ரூபாய், காலாண்டுக்கு ஆகக்குறைந்தது 45000 ரூபாய், அரையாண்டுக்கு ஆகக்குறைந்தது 75000 ரூபாய் அல்லது வருடாந்தம் 150000 ரூபாய் எனும் தவணைக்கட்டணத்தை செலுத்தும் வகையில் ஆயுள் காப்புறுதி ஒன்றை இந்தத் திட்டம் இடம்பெறும் காலப்பகுதியான ஜனவரி 1ஆம் திகதி முதல் மார்ச் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதியினுள் யூனியன் அஷ்யூரன்சில் பெற்றுக் கொள்ளும் வாடிக்கையாளர்களுக்கு இந்தச் சலுகைகள் பொருந்தும். உயர்ந்த தவணைக்கட்டணங்களைக் கொண்ட காப்புறுதிகளுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட தகைமைகள் வழங்கப்படும்.

இந்தத் திட்டம் தொடர்பில் யூனியன் அஷ்யூரன்ஸ் விநியோக பொது முகாமையாளர் செனத் ஜயதிலக கருத்துத் தெரிவிக்கையில், “லைஃவ்ஸ்டைல் போனஸ் 2021 ஐ அறிமுகம் செய்வதையிட்டு மிகவும் மகிழ்ச்சியடைகின்றோம். 

கடந்த ஆண்டில் நாம் முன்னெடுத்திருந்த லைஃவ்ஸ்டைல் போனஸ் திட்டம் வெற்றிகரமாக அமைந்திருந்ததைத் தொடர்ந்து, இந்த ஆண்டில் நாம் இந்தத் திட்டத்துக்காக கொண்டுள்ள பரிசுகளை வெற்றியீட்டுவதற்கு கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கின்றோம்.

50 க்கும் அதிகமான உயர் பெறுமதி வாய்ந்த பரிசுப் பொருட்களுடனான அதிர்ஷ்டசாலி தெரிவையும் நாம் உள்ளடக்கியுள்ளோம். நாடு முழுவதிலுமுள்ள எமது பங்காளர் வலையமைப்பிலிருந்து விலைக்கழிவுகளையும் பெற்றுக் கொள்ளலாம்.

சுகாதாரம், ஓய்வூதியம், கல்வி மற்றும் முதலீடு ஆகியவற்றில் நாம் வழங்கும் தீர்வுகளின் மூலமாக வாழ்க்கைமுறைகள், எதிர்பார்ப்புகள் மற்றும் உறவுகளை நாம் பாதுகாக்கும் நிலையில், எமது புதிய காப்புறுத்தாரர்களின் வாழ்க்கைக்கு இந்த விறுவிறுப்பான போட்டியினூடாக மேலும் வளமூட்டுவதற்கு எதிர்பார்க்கின்றோம்.” என்றார்.

லைஃவ்ஸ்டைல் போனஸ் 2021 இனால் அதிர்ஷ்டசாலி வெற்றியாளர்களாக தெரிவு செய்யப்படுவோருக்கு ஏழு பிரதான பரிசுகளை அறிவித்துள்ளது. முதல் பரிசாக iPhone 12 Pro Max 516GB, அதனைத் தொடர்ந்து முறையே iPad Air 2020 உடன் Apple Pencil 2nd Gen & Magic Keyboard, Samsung 55" Smart TV,  Asus UX363 Laptops, Samsung 43" Smart TVs, Samsung A30 Phones மற்றும் 1 வருடத்துக்கு இலவசமாக 50GB டேடா உடனான WiFi Routers போன்றன வழங்கப்படும்.

யூனியன் அஷ்யூரன்ஸ் லைஃவ்ஸ்டைல் போனஸ் உடன் பதிவு செய்து கொள்ளும் காப்புறுதிதாரர்களுக்கு, 2021 மார்ச் 31ஆம் திகதி வரை, விற்பனை பங்காளர்களிடமிருந்து 20% வரை விலைக்கழிவுகளைப் பெற்றுக் கொள்ளலாம். இந்தப் பங்காளர்களில் Vision Care, Eric Rajapakse Opticians, John Keells Office Automation (JKOA), Mobitel மற்றும் Vijitha Yapa Bookshop போன்றன அடங்கியுள்ளன.

மேலதிக தகவல்களுக்கு, தமது பிரத்தியேக நிதி ஆலோசகருடன் அல்லது யூனியன் அஷ்யூரன்ஸ் ஹொட்லைன் இலக்கமான 1330 உடன் தொடர்பு கொள்ளலாம். இந்தத் திட்டத்தின் நியதிகள் மற்றும் நிபந்தனைகளை அறிந்து கொள்வதற்கு unionassurance.com/our-services/life-style-bonusஎனும் இணையத்தளத்தை பார்க்கவும். யூனியன் அஷ்யூரன்ஸ் போட்டி பதிவு இலக்கம் WP/GT/5454 என்பது உள்நாட்டு இறைவரித்திணைக்களத்தினால் வழங்கப்பட்டுள்ளமையால், வாடிக்கையாளர்களுக்கு சட்டபூர்வமாக இந்த போட்டியின் பரிசுகள் சென்றடைவதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொழும்புப் பங்குப்பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட இலங்கையின் மாபெரும் நிறுவனமான ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்சின் அங்கத்துவ நிறுவனமாகத் திகழ்கின்றது. துறையில் மூன்று தசாப்த கால வெற்றிகரமான சேவையை யூனியன் அஷ்யூரன்ஸ் பூர்த்தி செய்துள்ளதுடன், 2020 நவம்பர் மாத இறுதியில் சந்தை மூலதனவாக்கமாக ரூ. 18.2 பில்லியனைத் தன்வசம் கொண்டிருந்ததுடன், ஆயுள் நிதியமாக ரூ. 41.3 பில்லியனைக் கொண்டிருந்தது.

2020 நவம்பர் மாதத்தில் மூலதன போதுமை விகிதம் (CAR) 447% ஆகவும் காணப்பட்டது. இலங்கையர்களின் கனவுக்கு வலுச்சேர்க்கும் வகையில் இயங்கும் யூனியன் அஷ்யூரன்ஸ், கல்வி, சுகாதாரம், பாதுகாப்பு, ஓய்வூதியம் மற்றும் முதலீடு போன்ற ஆயுள் காப்புறுதியுடன் தொடர்புடைய தீர்வுகளை இலங்கையர்ளுக்கு வழங்குகின்றது. 76 கிளைகளைக் கொண்டுள்ளதுடன், 3000க்கும் அதிகமான ஊழியர்களைக் கொண்டு யூனியன் அஷ்யூரன்ஸ் இயங்குவதுடன், தொடர்ச்சியாக ஊழியர்கள், தீர்வுகள் மற்றும் செயன்முறைகளில் முதலீடுகளை மேற்கொண்டு, ஆயுள் காப்புறுதித் துறையில் எழும் மாற்றங்களுக்கேற்ப பணியாற்றிய வண்ணமுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .