2024 மார்ச் 28, வியாழக்கிழமை

யாழ்ப்பாணத்தில் ஏஷியன் பெயின்ட்ஸின் கலர் ஐடியா காட்சியகம்

Editorial   / 2017 நவம்பர் 23 , பி.ப. 06:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

வர்ணத்தை ஒரு உற்பத்தியாக அன்றி அதை ஒரு கருப்பொருளாக முன்வைக்கும் ‘கலர் ஐடியா’ காட்சியகத்தை ஏஷியன் பெயின்ட்ஸ் அண்மையில் யாழ்ப்பாணத்தில் திறந்துள்ளது. பெயின்ட் உலகில் வாடிக்கையாளர்கள் விரிவான தமது எண்ணங்களை சரியான முறையில் கலப்பதற்கு வழிவகுக்கும் வகையில் இது அமைந்துள்ளது. 

இலக்கம் 32 ஸ்டான்லி வீதி யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள ஜஃவ்னா ஹாட்வெயார் நிறுவனத்தில் இது அமைந்துள்ளது. ஏஷியன் பெயின்ட்ஸின் உள்ளக மற்றும் வெளியக எமல்ஸன் வகைகளின் கலப்பை காட்சிப்படுத்தும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. றோயால் லக்ஷரி இன்டீரியர் எமல்ஸன் மற்றும் ஏபெக்‌ஷ அல்டிமா எக்ஸ்டிரியர் எமல்ஸன் வகைகளையும் உள்ளடக்கியதாக இது அமைந்துள்ளது. 

இந்தப் புதிய கலர் ஐடியா காட்சியகமானது, ஏஷியன் பெயின்ட்ஸின் உள்ளக சுவர்களுக்கான றோயால் பிளே முடிவு வடிவமைப்புக்கள், இத்தாலியின் றென்னர் வுட் பினிஷஸ், ஸ்மார்ட் கெயார் நீர் பாதுகாப்பு வகைகள் என்பனவற்றையும் உள்ளடக்கி உருவாக்கப்பட்டுள்ளது. 

பாரம்பரியமான பெயின்ட் விற்பனை முறையில் இருந்து விலகிச் சென்று இலங்கையில் ஏஷியன் பெயின்ட்ஸ் ஸ்தாபித்துள்ள ஐந்தாவது கலர் ஐடியா காட்சியகம் இதுவாகும். இங்கு வருகை தரும் வாடிக்கையாளர்களுக்கு வர்ணம் பூசப்பட்ட கூடம், சமையல் பகுதி, படுக்கை அறை என பல நுண் மாதரிகள் காட்டப்படுகின்றன. வித்தியாசமான வர்ணச் சேர்க்கைகள், சரி செய்யக் கூடிய ஒளியமைப்பு முறைகள் என்பன இவற்றில் அடங்கும். 

யாழ்ப்பாண கலர் ஐடியா காட்சியகத்தின் திறப்பு பற்றி கருத்து வெளியிட்ட ஏஷியன் பெயின்ட்ஸின் தேசிய விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் முகாமையாளர் ஏ.கே.பரந்தாமன் “எம் எல்லோரையும் பொருத்த மட்டில் வர்ணத் தெரிவானது மிகவும் தனிப்பட்ட ஒரு விடயமாகும். எமது கலர் ஐடியா காட்சியகத்தின் படி யாழ்ப்பாணத்திலும் அதனை அண்டிய பகுதிகளிலும் வாழும் மக்களுக்கு தமது விருப்புக்குரிய வர்ணங்களைத் தெரிவு செய்யும் ஒரு அனுபவத்தை நாம் அளிக்கின்றோம். நவீன வர்ணப்பூச்சு முடிவுகள், மாற்றங்களுக்கு ஏற்ற வர்ணக் கலப்புக்கள், தமது தனிப்பட்ட விருப்பு, முன்னுரிமை, சுவை என்பனவற்றுக்கு ஏற்ற தெரிவுகளுக்கும் நாம் இடமளிக்கின்றோம்” என்று கூறினார்.   

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X