2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

யூனியன் அஷ்யூரன்ஸுக்கு கௌரவிப்பு

Editorial   / 2018 டிசெம்பர் 11 , பி.ப. 12:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

The Chartered Accountants of Sri Lanka (CA Sri Lanka) வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படும் வருடாந்த நிதி அறிக்கைகளுக்கான விருதுகள் வழங்கும் நிகழ்வில், யூனியன் அஷ்யூரன்ஸ் நிறுவனத்தின் நிதியறிக்கைக்கு, கூட்டாண்மை சமூக பொறுப்புணர்வு அறிக்கையிடலுக்கான தங்க விருது வழங்கப்பட்டிருந்தது.

யூனியன் அஷ்யூரன்ஸ் இலங்கையில் முன்னெடுத்திருந்த ‘யூனியன் மனிதாபிமானம்’ எனும் சமூக பொறுப்புணர்வு அறிக்கையிடல் திட்டத்தை பிரதிபலிக்கும் வகையில் இந்த விருது அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தத் திட்டத்தினூடாக, பொது மக்களுக்கு அவசியமான முக்கியத்துவம் வாய்ந்த, தகவல்கள் பகிர்ந்தளிக்கப்பட்டிருந்ததுடன், தலசீமியா, டெங்கு மற்றும் நீரிழிவு நோய்களிலிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்வது தொடர்பான விளக்கங்கள் பகிரப்பட்டிருந்தன. நீரை பாதுகாப்பது, பொருட்களை மீள் சுழற்சிக்குட்படுத்துவது, கடதாசி பாவனையைக் கட்டுப்படுத்தல் போன்ற பல்வேறு சூழல் பாதுகாப்பு செயற்பாடுகள் பற்றிய விளக்கங்களும் வழங்கப்பட்டிருந்தன.  

2017 வருடாந்த நிதி அறிக்கைக்கு, காப்புறுதி பிரிவில் சிறந்த நிதி அறிக்கையாக தெரிவு செய்யப்பட்டு, வெள்ளி விருது வழங்கப்பட்டிருந்தது. இதனூடாக, மேலாண்மை மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றில் யூனியன் அஷ்யூரன்ஸ் கொண்டுள்ள நற்பெயரை மேலும் உறுதி செய்யும் வகையில் அமைந்துள்ளது.   

யூனியன் அஷ்யூரன்ஸ் பிஎல்சியின் நிதி மற்றும் திட்டமிடல் செயற்பாடுகளுக்கான பொது முகாமையாளர் ஆஷா பெரேரா கருத்துத் தெரிவிக்கையில், “இந்த விருதுகளை நாம் எமது சகல பங்காளர்களுக்கும் சமர்ப்பிக்கிறோம், யூனியன் அஷ்யூரன்ஸின் வெற்றிகரமான செயற்பாடுகளுக்கு இவர்கள் பாரிய பங்களிப்பை வழங்குகின்றனர். நம்பிக்கை வாய்ந்த உறவுகளைக் கட்டியெழுப்புவது, இலங்கையின் சமூகங்களுக்கு சேவையாற்றுவதற்கான அதன் முயற்சிகள் போன்றவற்றை பிரதிபலிக்கும் வகையில் இந்த விருதுகள் அமைந்துள்ளன. இந்த விருதுகள் யூனியன் அஷ்யூரன்ஸ் அணியினரை மேலும் ஊக்குவிப்பதாக அமைந்திருக்கும் என்பதுடன், வெளிப்படைத்தன்மையான, சிறந்த மேலாண்மை மற்றும் சிறப்புகளை வருடாந்தம் எய்த வழிகாட்டுவதாக அமைந்திருக்கும்” என்றார்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .