2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

யூனியன் மனிதாபிமானம் ஊடாக நீரிழிவு தொடர்பான விழிப்புணர்வு

Editorial   / 2018 ஒக்டோபர் 02 , பி.ப. 09:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

‘யூனியன் மனிதாபிமானம் - அறிவார்ந்த, ஆரோக்கியமான, வளமான நாளை’ எனும் யூனியன் அஷ்யூரன்ஸின் சமூகப் பொறுப்புணர்வு வர்த்தக நாமத்தின் கீழ், தொடர்ச்சியாக சமூக மேம்படுத்தல்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

இதனூடாக சமூகங்களுக்கு பெறுமதி சேர்க்கப்படுவதுடன், மக்கள் மத்தியில் விழிப்புணர்வூட்டல்களும் இடம்பெறுகின்றன. மூன்று நோய்களான தலசீமியா, டெங்கு மற்றும் நீரிழிவு தொடர்பில் பொது மக்கள் மத்தியில் தவிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு அவசியமான வழிகாட்டல்கள் இந்தச் சமூகப் பொறுப்புணர்வு நடவடிக்கைகளினூடாக முன்னெடுக்கப்படுகின்றன.   

உலகளாவிய ரீதியில் பெருமளவு உயிரிழப்புகள் ஏற்படுவதற்கு காரணமான அமைதியான ஆட்கொல்லியாக நீரிழிவு கண்டறியப்பட்டுள்ளது. உள்நாட்டு புள்ளிவிவரங்களும் இவ்வாறான நிலையை உணர்த்துகிறது. தவிர்ப்பு நடவடிக்கைகளை மேம்படுத்துவது, பராமரிப்பை வலிமைப்படுத்துவது, விழிப்புணர்வை ஏற்படுத்துவது மற்றும் அவதானமூட்டுவது போன்றன இலங்கையில் நீரிழிவை கட்டுப்படுத்துவதற்கு பெரிதும் ஏதுவான காரணிகளாக அமைந்துள்ளன. 

இதன் அடிப்படையில் யூனியன் மனிதாபிமானத்தினூடாக நாடளாவிய ரீதியில் நீரிழிவு தொடர்பான விழிப்புணர்வு செயற்பாடுகள் சுகாதார அமைச்சு, தொற்றா நோய்கள் தடுப்பு அலகுகள் போன்றவற்றுடன் இணைந்து முன்னெடுக்கப்படுகின்றன.

இந்தச் செயற்பாடுகளினூடாக நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்களை இனங்காண்பது மற்றும் மருத்துவ ஆலோசனை பற்றி ஆலோசனைகளை பெற்றுக் கொடுப்பது மற்றும் நிலைமையை கட்டுப்படுத்திக் கொள்வது பற்றிய வழிகாட்டல்களை வழங்குவது போன்றன இலக்குகளாக அமைந்துள்ளன.  

ஜுன், ஜுலை மற்றும் ஓகஸ்ட் மாதங்களில் நாடளாவிய ரீதியிலான விழிப்புணர்வு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. இந்தத் திட்டத்தினூடாக மொத்தமாக 71 இலவச பரிசோதனை நடவடிக்கைகள் நாட்டின் வெவ்வேறு 71 பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

ஒவ்வொரு நோயாளருக்கும் இலவச குருதி பரிசோதனை, குருதி அழுத்த பரிசோதனை மற்றும் BMI பரிசோதனை போன்றன முன்னெடுக்கப்பட்டிருந்ததுடன், அத்தியாவசியமான மருத்துவ ஆலோசனைகளும் தகைமை வாய்ந்த மருத்துவ அதிகாரிகளினூடாக வழங்கப்பட்டிருந்தன.

மொத்தமாக 2700 பேர் இந்த பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டிருந்ததுடன், 891 பேருக்கு நீரிழிவு ஏற்படக்கூடிய வாய்ப்புகள் உள்ளமை கண்டறியப்பட்டு, அவர்களுக்கு அவசியமான ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டல்கள் போன்றன இலவசமாக வழங்கப்பட்டிருந்தன.  

வெளிப்படையான, மதிப்புடனான மற்றும் சௌகரியமான வகையில் சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி, அவர்களின் வாழ்க்கையை மாற்றியமைக்கும் பிணைப்பு என்பதன் பிரகாரம், ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான சமூகத்தை கட்டியெழுப்புவது என்பதில் யூனியன் அஷ்யூரன்ஸ் உறுதியான நம்பிக்கையை கொண்டுள்ளது.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .