2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

யூனியன் வங்கி 9 மாதங்களில் வலுவான சிறந்த நிதிப்பெறுபேறுகள்

Editorial   / 2017 நவம்பர் 20 , பி.ப. 05:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

2017ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில், யூனியன் வங்கி, அதன் வலுவான நிதிப்பெறுபேறுகளை தொடர்ந்து உறுதி செய்திருந்ததுடன், மைய வங்கியில் மற்றும் இலாபத்தன்மை ஆகியவற்றில் அதன் வினைத்திறன்மிகு வர்த்தக இலக்குக்கு மேலும் சக்தியளித்துள்ளது  

கூர்நோக்குடன் கூடிய முயற்சிகள் மற்றும் சேவைத்தொகுப்பு விஸ்தரிப்பு ஆகியவற்றின் விளைவாக, வங்கியின் கடன்கள் மற்றும் முற்பணங்கள் ஆகியன 22% Year to Date (YTD) வளர்ச்சியைக் கண்டன. நிகர வட்டி வருமானம் ரூ.2,318 மில்லியன் வளர்ச்சியை 2017ஆம் ஆண்டின் 3ஆம் காலாண்டில் பதிவு செய்தது.Year on Year (YoY) அடிப்படையில், இது குறிப்பிடத்தக்க 40 சதவீத வளர்ச்சியாகும். குறித்த இந்தக் காலப்பகுதியில், வங்கியானது, தொடர்ந்தும் நிகர வட்டி வரம்பு (NIM) மற்றும் மொத்த சொத்து வளர்ச்சி ஆகிய இரண்டின் சிறப்பான முகாமைத்துவத்தின் உதவியுடன் NII மேம்படுத்தல் மீது கவனம் செலுத்தியது. 

கட்டண வருமான வளர்ச்சி மீது யூனியன் வங்கியினால் சிறப்பாக முன்னெடுக்கப்படும் மூலோபாய நடவடிக்கைகள் , குறித்த இந்த அறிக்கையிடல் காலப்பகுதியில் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டமை காரணமாக நிகர கட்டணம் மற்றும் கமிஷன் வருமானமானது, 21சதவீத அதிகரித்த YoYஉடன் ரூ. 485 மில்லியன் ஆனது. இது குறித்த அறிக்கையிடல் காலப்பகுதியில் சேகரிக்கப்பட்ட வர்த்தக மற்றும் ரெமிட்டன்ஸ் ஆகியவற்றுடன் தொடர்புடைய கட்டணங்கள், வைப்புகளுடன் தொடர்புடைய கட்டணங்கள், கடன் முன்னெடுத்தல் கட்டணங்கள் ஆகியவற்றின் ஊடாகவே சாத்தியமானது.  

வங்கியின் திறைசேரி செயற்பாடுகள், குறிப்பிடத்தக்கது என்பதுடன், முதலீட்டு ஈட்ட YoYஇல் அதீத எழுச்சியுடன் சுட்டிக்காட்டத்தக்க 88சதவீத  அதிகரிப்போடு, ரூ.106.1 மில்லியன்களை பெற்றுள்ளது. வங்கியின் சொத்து கலப்பில் இடம்பெற்ற மாற்றமானது, நிதிகள் - முதலீட்டு அலகுகளில் இருந்து, வட்டி வருமான சொத்துகளாக மாற்றம் பெற்றதன் காரணமாக, முதலீட்டு அலகு வருமானமானது,45சதவீத YoY உடன் ரூ. 193 மில்லியன்களாக குறைந்ததன் காரணமாக, நிகர வர்த்தக வருமானத்தில் குறைந்த திரவத்தன்மையை காண்பித்தது. இதனைத் தொடர்ந்து, மொத்த வர்த்தக வருமானமானது,15 சதவீதமானவுடன்  ரூ. 300 மில்லியனாக குறைவடைந்தது.ஏனைய செயற்பாட்டு வருமானங்கள், 24% YoYஉடன் ரூ.182 மில்லியன்களாக குறைந்தது.இது வெளிநாட்டு நாணய பரிமாற்ற வருமானத்தில் இழப்பு ஏற்பட்டதன் காரணமாக நடந்தது.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .