2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

யூனியன் வங்கியின் சிறந்த நிதிப்பெறுபேறுகள்

Editorial   / 2018 மார்ச் 18 , மு.ப. 11:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

தளம்பல்களுடன் கூடிய பொருளாதார சூழல் காணப்பட்ட போதிலும், வங்கியின் நிதிப் பெறுபேறுகள் 2017ஆம் ஆண்டில் உறுதியாகப் பதிவாகியிருந்தன. குறிப்பாக தொழிற்பாட்டு நடவடிக்கைகள் மூலமான இலாபம் 35.6% இனால் அதிகரித்து 782 மில்லியன் ரூபாயாகப் பதிவாகியிருந்தது.

2016ஆம் ஆண்டில் இந்தப் பெறுமதி 577 மில்லியன் ரூபாயாகப் பதிவாகியிருந்தது. வரிக்கு முன்னைய இலாபம் 534 மில்லியன் ரூபாயாகப் பதிவாகியிருந்தது. இது முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 23% அதிகமாகும். வங்கியின் நிகர வருமானம் 39.7% இனால் அதிகரித்து 11,938 மில்லியன் ரூபாயாகப் பதிவாகியிருந்தது. 2016இல் இந்தப் பெறுமதி 8,546 மில்லியன் ரூபாயாகப் பதிவாகியிருந்தது.   

2017இல் வங்கியின் வருமான வளர்ச்சியில் பிரதான வங்கியியல் செயற்பாடுகள் பங்களிப்பை வழங்கியிருந்தன. முழு அளவிலான வணிக வங்கி எனும் நிலைக்கு வங்கி தொடர்ச்சியாக முன்னேற்றம் கண்டு வருவதை இந்தப் பெறுபேறுகள் உறுதி செய்துள்ளன. குறிப்பாக சில்லறை, கூட்டாண்மை மற்றும் சிறிய, நடுத்தர துறைகளில் பரந்தளவு கவனத்தை வங்கி செலுத்தியுள்ளது.

2014ஆம் ஆண்டின் பிற்பகுதியில் வங்கியில் மேற்கொள்ளப்பட்டிருந்த மூலதன வைப்பைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விரிவாக்கல் மற்றும் துரித அபிவிருத்தி செயற்பாடுகளின் பெறுபேறுகளை இந்த நிதிப்பெறுபேறுகள் பிரதிபலிக்கின்றன.   

வங்கியின் தேறிய வட்டி வருமானம் 3,046 மில்லியன் ரூபாயாகப் பதிவாகியிருந்தது. இது முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 539 மில்லியன் ரூபாயால் அதிகரித்துள்ளது. அதாவது 21.5% அதிகரிப்பாகும். தேறிய வட்டி வருமானம் அதிகரிப்பில், வங்கியின் ஐந்தொகை வளர்ச்சி முக்கிய பங்களிப்பை வழங்கியிருந்தது.

வங்கியின் கடன்கள், பெறுகைகள் 2017ஆம் ஆண்டின் இறுதியில் 70,578 மில்லியன் ரூபாயாகும். இது முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 15,140 மில்லியன் ரூபாய் (27.3%) அதிகரிப்பாகும். வங்கியின் மூலோபாயத் திட்டத்தின் பிரகாரம், வங்கியின் கடன்கள் மற்றும் பெறுகைகளும் மாற்றமடைந்திருந்தன.  

வங்கியின் வைப்பு திரட்டல் கொள்கைகள் சிறந்த பெறுபேறுகளை வழங்கியிருந்தன. வங்கியின் வைப்பு இருப்பு 70,326 மில்லியன் ரூபாயாகும்.  முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 35.7% அதிகரிப்பைப் பதிவு செய்திருந்தது. அதாவது 18,484 மில்லியன் ரூபாயால் அதிகரித்திருந்தது. இந்த வளர்ச்சியில் பெருமளவு பங்களிப்பை தனிநபர் நிலையான வைப்பு வளர்ச்சியினூடாகப் பெறப்பட்டிருந்தது.

முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 58.7% வளர்ச்சியைப் பதிவு செய்து 13,284 மில்லியன் ரூபாயாகப் பதிவாகியிருந்தது. வங்கி தொடர்ச்சியாக CASA மீது கவனம் செலுத்தி வருவதுடன், வெளியக ATM வலையமைப்பு, டெபிட் அட்டைகள், விற்பனை செயலணி மற்றும் மேம்படுத்தப்பட்ட வர்த்தக நாம விழிப்புணர்வு போன்ற மூலோபாய செயற்பாடுகள் இதற்காக முன்னெடுக்கப்படுகின்றன.

CASA பெறுமதி 3,952 மில்லியன் ரூபாயாகும். முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 32.0% அதிகரிப்பாகும். CASA கலப்பு 2017ல் 23% ஆக பதிவாகியிருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X