2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

யூனியன் வங்கியுடன் சித்திரைப் புத்தாண்டு

Editorial   / 2018 ஏப்ரல் 02 , பி.ப. 08:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

யூனியன் வங்கி, தமிழ் - சிங்கள புது வருடத்தை ஒட்டி ‘முன்கூட்டியே புத்தாண்டு கொடுக்கல்வாங்கல்’ (‘Kalin Avurudu Ganudenu’) என்ற சேமிப்புகள் மீது வியத்தகு முன்கூட்டிய வெகுமதி வழங்கலை அறிமுகம் செய்துள்ளது.  

2018 மார்ச் 25ஆம் திகதி முதல் அளிக்கப்படும் இந்த வழங்கல்கள், வாடிக்கையாளர்கள், அடுக்குகள் மட்ட முறைமையிலான சேமிப்புகளை மேற்கொள்வதற்கும், குறித்த ஒவ்வொரு இலக்குமட்டத்துக்கும் பெறுமதிமிக்க வெகுமதிகளைப் பெற்றுக்கொள்வதற்கும் வழிசமைக்கும் அதேவேளை, தமது சேமிப்பு மீதி சிறப்பான வளர்ச்சியைப் பெற்றுக்கொள்வதையும் நோக்க முடியும்.

இந்த வருடத்துக்கான ஊக்குவிப்பானது, தெரிவுசெய்யப்பட்ட சேமிப்பு அடுக்கு மட்டங்கள் மீது பல்வேறு வெகுமதிகளை அளிப்பதன் காரணமாக, அளிக்கப்படும் சலுகைகளை மேலும் மேம்படுத்துகின்றது. குறித்த இந்த வெகுமதிகள், புதிய மற்றும் ஏற்கெனவேயுள்ள சேமிப்பு மற்றும் நடைமுறைக் கணக்குகளில் மேற்கொள்ளப்படும் புதிய வைப்புகள் மீது வழங்கப்படும். 

அடுக்கு அடிப்படையிலான வெகுமதிக் கட்டமைப்பில் ரூ. 10,000 ற்கும் மேற்பட்ட வைப்புகளுக்கு பயணப் பை ஒன்று அளிக்கப்பட, ரூ. 50,000 ற்கும் மேற்பட்ட வைப்புகளுக்கு மின்சாரக் கேத்தல் அளிக்கப்படும்.

ரூ. 100,000க்கும் மேற்பட்ட வைப்புகளை மேற்கொள்வோர், ‘ப்ளுடுத் ஸ்பீக்கர்’, ‘பொப்-அப் டோஸ்டர்’ அல்லது மொபைல் பவர் பேங்க் ஆகியவற்றில் ஒன்றை வெகுமதியாகப் பெற்றுக்கொள்ள முடியும்.

ரூ. 500,000 ற்கும் மேற்பட்ட வைப்புகளை மேற்கொள்வோருக்கு கேஸ் சிலிண்டர் மற்றும் கேஸ் குக்கர், ஃபுட் ப்ரொசெசர்,  ரிமோர்ட் கொன்ட்ரோல் ஸ்டேன்ட் ஃபேன் போன்றவற்றில் ஒன்றைப் பெற்றுக்கொள்ள முடியும்.

ரூ. 1,000,000 மற்றும் அதற்கு மேற்பட்ட தொகை வைப்புகளுக்கு LED TV’கள், மினி பார் குளிர்சாதனப்பெட்டிகள், Tab கள் அல்லது கேஸ் சிலிண்டர், இரண்டு பேர்னர் க்ளாஸ் டொப் கேஸ் குக்கர் மற்றும் ஒரு சோஸ்பேன் உள்ளடங்கிய சமையலறை பயன்பாட்டு தொகுதி ஆகிய பிரத்தியேக தொகுதி வெகுமதிகளில் ஒன்றை பெற்றுக்கொள்ள முடியும்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .