2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

லக்ஸ்பிரே இல்லத்தரசிகளுக்கு தங்கப் பரிசுகள்

Editorial   / 2018 ஜூன் 21 , பி.ப. 12:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

லக்ஸ்பிரே முன்னெடுத்திருந்த ஊக்குவிப்புத்திட்டமான ‘லக்ஸ்பிரே இல்லத்தரசிகளுக்கு தங்கப் பரிசுகள்’ ஊடாக 30 அதிர்ஷ்டசாலி வெற்றியாளர்களுக்குத் தங்க நெக்லஸ்களை பரிசாக வழங்கியிருந்தது.

இந்தப் பரிசுகளைக் கையளிக்கும் நிகழ்வு வெலிசறையில் அமைந்துள்ள லங்கா மில்க் ஃபூட்ஸ் நிறுவனத்தில் அண்மையில் இடம்பெற்றது. இந்த ஊக்குவிப்புத்திட்டத்தில் முதற்கட்டமாகப் பங்கேற்றிருந்த ஒரு தொகுதியினராக இந்த 30 அதிர்ஷ்டசாலி வெற்றியாளர்கள் அமைந்திருந்ததுடன், இந்த நிகழ்வில், லங்கா மில்க் ஃபூட்ஸ் நிர்வாகத்தினரும்  கலந்து கொண்டனர்.  

இந்த ஆண்டு பெப்ரவரி மாதம் ‘லக்ஸ்பிரே இல்லத்தரசிகளுக்கு தங்கப் பரிசுகள்’ திட்டத்தை லக்ஸ்பிரே அறிமுகம் செய்திருந்தது. உண்மையான வாடிக்கையாளர்களை கௌரவிக்கும் நோக்கத்துடன் இந்தத்திட்டம் அமைந்திருந்தது.

அத்துடன், அவர்களுடன் பேணும் உறவை மேலும் கட்டியெழுப்பும் வகையிலும் அமைந்துள்ளது. இந்தத் திட்டம் மூன்று கட்டங்களில் இந்த ஆண்டு முழுவதிலும் முன்னெடுக்கப்படவுள்ளதுடன், 22 கெரட் தங்க நெக்லஸ்களை சுமார் 100 பங்குபற்றுநர்களுக்கு வழங்க லங்கா மில்க் ஃபூட்ஸ் திட்டமிட்டுள்ளது.  

லங்கா மில்க் ஃபூட்ஸ் பிஎல்சியின் ஊக்குவிப்புகள் மற்றும் பொது உறவுகள் முகாமையாளர் வருண மதுசங்க கருத்துத் தெரிவிக்கையில், “இலங்கையின் பல தலைமுறையினரின் நம்பிக்கையை வென்ற வர்த்தக நாமமாக லக்ஸ்பிரே திகழ்கிறது. சந்தையில் காணப்படும் பால்மா வர்த்தக நாமங்களில் லக்ஸ்பிரே முன்னிலையில் திகழ்வதனூடாக, எமது தயாரிப்பின் தரம் உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், நுகர்வோருடன் உறுதியான பிணைப்பை கொண்டுள்ளதையும் வெளிப்படுத்துகிறது. லக்ஸ்பிரே இல்லத்தரசிகளுக்கு தங்கப் பரிசுகள்’ திட்டத்தின் நோக்கம், எமது நுகர்வோருடன் நாம் கொண்டுள்ள உறவை மேலும் வலுப்படுத்துவதாகும். இந்த ஊக்குவிப்புத்திட்டத்தின் முதல் தொகுதி வெற்றியாளர்களுக்கு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். தொடர்ச்சியாக எமது நுகர்வோரிடமிருந்து எமக்கு பெருமளவான வரவேற்பு கிடைத்துள்ளதுடன், தொடர்ந்து இந்த திட்டத்தை முன்னெடுத்து மேலும் பரிசுகளை வழங்க நாம் திட்டமிட்டுள்ளோம்” என்றார்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .