2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

லோயல்டி அட்டைகளை விநியோகிக்கும் சதாஹரித

Gavitha   / 2020 நவம்பர் 23 , பி.ப. 04:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

வணிக வனாந்தரச் செய்கையில் ஈடுபடும் தேசத்தின் முன்னணி நிறுவனமான சதாஹரித பிளான்டேஷன்ஸ் லிமிடெட், தனது வாடிக்கையாளர்களுக்கு விசேட சலுகைகளை வழங்கும் “சதாஹரித பிரிவிலேஜ் அட்டை” விநியோக செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளது. நெருக்கடியான சூழ்நிலை நிலவும் இந்தக் காலப்பகுதியில் பகிர்ந்தளிக்கும் வகையில் இந்த நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது.

அண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த லோயல்டி திட்டத்தினூடாக வாடிக்கையாளர்களுக்கு பல பிரத்தியேகமான அனுகூலங்கள், ஒப்பற்ற சலுகைகள் மற்றும் அனுபவங்களை வழங்கப்படுகின்றது. நாடு முழுவதையும் சேர்ந்த வாடிக்கையாளர்களுக்கு லோயல்டி அட்டைகளை பகிர்ந்தளிக்கும் நடவடிக்கைகளை சதாஹரித ஆரம்பித்துள்ளதுடன், இந்த அட்டையைப் பயன்படுத்தி பரந்தளவு விற்பனையாளர் வலையமைப்பிலிருந்து விலைக்கழிவுகள் மற்றும் அனுகூலங்களைப் பெற்றுக் கொள்ள முடியும்.

இந்த அட்டையினூடாக கிடைக்கும் பரந்தளவு அனுகூலங்களில் சுகாதாரப் பராமரிப்புத்துறையைச் சேர்ந்த வைத்தியசாலைகள் மற்றும் பாமசிகள், சிறுவர்களுக்கான கல்வித் தேவைகளை நிவர்த்தி செய்யும் வகையில் கல்வியகங்கள், புத்தக வெளியீட்டாளர்கள், புத்தக விற்பனை நிலையங்கள், வீட்டுப்பாவனை, அத்தியாவசிய பொருட்களான உணவு வகைகள், ஆடை விற்பனையகங்கள், பாதணிகள், மின்சாதனங்கள், தளபாடங்கள், கூரைத் தகடுகள், சூரியசக்தி தீர்வுகள், வாகனப் பராமரிப்பு, ஒளியூட்டல் தீர்வுகள், பிரத்தியேகப் பராமரிப்பு மற்றும் பியுட்டி சலோன்கள், நறுமணத் தயாரிப்புகள் விற்பனையகங்கள், ஆபரணக் காட்சியறைகள் மற்றும் கண் சிகிச்சை நிலையங்கள்  அல்லது உணவகங்கள், விடுமுறைத் தெரிவுகள், ஹோட்டல்கள் மற்றும் சாகச பயண அனுபவங்கள் என பலதும் அடங்கியுள்ளன. 

பிரதம நிறைவேற்று அதிகாரியும் நிறைவேற்றுப் பணிப்பாளருமான கலாநிதி. பிரதீப் எட்வர்ட் கருத்துத் தெரிவிக்கையில், “எமது லோயல்டி அட்டைத் திட்டத்தினூடாக, எமது வாடிக்கையாளர்களைச் சென்றடைந்து அவர்களின் வாழ்க்கைக்கு வளமூட்ட எம்மால் முடிந்துள்ளது. இந்தத் திட்டத்தின் அங்கத்தவர் எனும் வகையில், நாம் கைகோர்த்துள்ள பெருமளவான விற்பனை நிலையங்களிலிருந்து அவர்களுக்கு பெருமளவு விலைக்கழிவுகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என்பதுடன், வாடிக்கையாளர்களுக்கு சேமிப்பதற்கு மேலதிக வாய்ப்புகளை வழங்குவதாக அமைந்துள்ளது. அடுத்த சில மாதங்களில் அட்டை விநியோகத்தை தொடர்ந்தும் முன்னெடுக்க நாம் எதிர்பார்ப்பதுடன், இந்தத் திட்டத்தில் புதிய சலுகை வழங்கல்களை உள்வாங்கவும் எதிர்பார்க்கின்றோம்” என்றார்.

புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள “சதாஹரித பிரிவிலேஜ் அட்டை” திட்டம், விரிவடைந்து செல்லும் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை நிவர்த்தி செய்வதாக அமைந்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .