2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

‘லிற்றில் ஹார்ட்ஸ்’க்கு பேனா, பென்சில்கள் ஊடாக உதவி

Editorial   / 2018 ஏப்ரல் 26 , மு.ப. 09:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

  ‘லிற்றில் ஹார்ட்ஸ்’ வேலைத் திட்டத்துக்கு உதவும் வகையில், லிற்றில் ஹார்ட்ஸ் பேனா மற்றும் கிரம்ளின் லிற்றில் ஹார்ட்ஸ் பென்சில்களை அறிமுகப்படுத்துவது பற்றி 2017 செப்டெம்பர் மாதத்தில் DSL Enterprises (Pvt.) Ltd. நிறுவனம் அறிவித்திருந்தது.    

இந்த நன்கொடையின் முதல் கட்டமாக, ‘லிற்றில் ஹார்ட்ஸ்’ நிதியத்துக்கு 20 மில்லியன் ரூபாயை சில மாதங்களுக்குள் பெற்றுக்கொடுப்பது பற்றி, அண்மையில் கொழும்பு லேடி றிஜ்வே வைத்தியசாலையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றின் போது DSL அறிவித்திருந்தது.

‘லிற்றில் ஹார்ட்ஸ்’ வேலைத் திட்டமானது, சிறுவர் நோய் வைத்திய நிபுணர்களின் கல்லூரியால் ஆரம்பிக்கப்பட்டதாகும். லேடி றிஜ்வே வைத்தியசாலையில், இருதய மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவுகளை அமைப்பதற்கென பல்வேறு நிறுவனங்கள் உதவிகளை வழங்கி வருகின்றன.

இந்தக் கட்டடத் தொகுதியானது, சிறுவர்களின் இருதய நோய்களுக்கு (CHD) சிகிச்சை பெற்றுக்கொடுப்பதற்கென்று ஒதுக்கப்பட்டதாகும். இலங்கையில் ஒவ்வொரு வருடமும் சுமார் 3,000 க்கும் அதிகமான பிள்ளைகள், இவ்வாறான தேவைப்பாட்டுடன் பிறக்கின்றன.

‘லிற்றில் ஹார்ட்ஸ்’ பென்சில்கள், பேனாக்கள் என்பது, பொது மக்கள் மிகவும் இலகுவான முறையில் இத்திட்டத்தில் பங்கெடுக்கக்கூடிய ஒரு செயற்திட்டமாகும். இரக்க சிந்தை கொண்ட ஒவ்வொருவரின் பங்களிப்பையும் சிறுவர்களின் உயிர்களைக் காப்பாற்றுவதற்காகப் பெற்றுக்கொள்ளும் வகையில், பேனாக்கள், பென்சில்கள் என்பன நியாயமான விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. 

பேனாக்களும் பென்சில்களும் அன்றாடம் பாவனையில் உள்ள கருவிகளாகும். ‘லிற்றில் ஹார்ட்ஸ்’ பேனாக்களும் பென்சில்களும், ‘லிற்றில் ஹார்ட்ஸ்’ வேலைத் திட்டத்துக்கு நிதி சேகரிக்கும் நோக்கிலேயே தயாரிக்கப்படுபவை ஆகும். இதனால், வாடிக்கையாளர்கள் இதுபற்றிச் சிந்தித்து, பங்கெடுத்துக்கொள்ள முடியும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .