2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு ஸ்கானர் இயந்திரம்

Editorial   / 2018 ஜூன் 04 , பி.ப. 09:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

லேடி ரிஜ்வே வைத்தியசாலையில் கடந்த சில காலமாக அல்ட்ரா சவுன்ட் ஸ்கானர் (Ultrasound Scanner) இயந்திரத்துக்கு நிலவிவரும் குறைபாட்டை நிவர்த்தி செய்யும் வகையில், டேவிட் பீரிஸ் குழுமம் ஸ்கானர் இயந்திரமொன்றை அன்பளிப்புச் செய்தது. இந்த ஸ்கானர் இயந்திரத்தின் பெறுமதி 70 இலட்சம் ரூபாய் என்பதுடன், டேவிட் பீரிஸ் குழுமத்தின் நலன்புரி குழுவால் இந்த நன்கொடை வழங்கப்பட்டது. 

அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்பட்ட இந்த இயந்திரம், அசைக்கக் கூடியதாக அமைந்திருப்பதுடன், உலகத் தரம்வாய்ந்த சிறந்த வர்த்தகநாம உற்பத்தியாகும்.  

இந்த இயந்திரம் சிறுவர் சத்திரசிகிச்சைப் பிரிவின் பயன்பாட்டுக்கு வழங்கப்பட்டிருப்பதுடன், இதன் ஊடாகச் சிறுவர்களை கதிரியக்கப் பிரிவுக்குக் கொண்டு செல்லவேண்டும் என்ற சிரமம் இல்லாமல் செய்யப்பட்டு, சத்திரசிகிச்சைப் பிரிவிலேயே தேவையான ஆய்வுகளை மேற்கொள்வதற்கான சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் தேவையான பரிசோதனைகளை நடத்தி, நோயை அடையாளம் கண்டு உடனடியாகச் சிகிச்சை அளிப்பதற்கான சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது.   

இந்த ஸ்கானர் இயந்திரத்தை டேவிட் பீரிஸ் மோட்டார் கம்பனி (பிரைவேட்) லிமிட்டட்டின் நிறைவேற்றுப் பணிப்பாளரும், டேவிட் பீரிஸ் குழுமத்தின் நலன்புரி குழுவின் தலைவருமான ஜயந்த ரத்னாயக்க, லேடி றிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் டொக்டர் லலித் பொத்தல்கோடவிடம் கையளித்தார். 

ஸ்கானர் இயந்திரத்தைக் கையளித்த பின்னர் கருத்துத் தெரிவித்த ஜயந்த ரத்னாயக்க, “மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கு எமது நிறுவனம் தொடர்ந்தும் உதவிகளை வழங்கி வருகிறது.வைத்தியசாலைகளுக்குத் தேவையான உபகரணங்களைப் பெற்றுக் கொடுப்பது மாத்திரமன்றி, குறைந்த வருமானம்பெறும் குடும்பங்களைச் சேர்ந்த பாடசாலைப் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில்களை வழங்குதல், பாடசாலை உபகரணங்கள் மற்றும் கட்டடங்களை அன்பளிப்புச் செய்தல், கணினி ஆய்வு கூடங்களை அமைத்துக் கொடுத்தல், பாடசாலை நூலகங்களுக்கு அனுசரணை வழங்குதல், குறைத்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுத்தல், மோசமான நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வைத்திய உதவிகளைச் செய்தல், மாற்றுவலுவுடையோருக்கு நிதியுதவி அளித்தல், கஷ்டப் பிரதேசங்களுக்குப் போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்தல் மற்றும் பெண்களை வலுவூட்டுவதற்கான வேலைத்திட்டங்கள் போன்றவை டேவிட் பீரிஸ் குழுமத்தின் நலன்புரி குழுவின் ஊடாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது” என ரத்னாயக்க மேலும் தெரிவித்தார்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X