2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

வருட இறுதிக்குள் செலவை பிரதிபலிக்கும் விலைச்சூத்திரம்

Editorial   / 2018 ஜனவரி 30 , மு.ப. 12:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

எரிபொருள் மற்றும் மின்சாரக் கட்டணம் ஆகியவற்றுக்கான செலவை பிரதிபலிக்கும் புதிய கட்டண அறவீட்டு விலைச்சூத்திரமொன்றை அறிமுகம் செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்தார்.  

இதேவேளை, இந்த விடயம் தொடர்பாக சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டிருந்த அறிக்கையில், இலங்கையில் எரிபொருள் மற்றும் மின்சாரக் கட்டணம் ஆகியவற்றுக்கு விலைச்சூத்திரம் அடிப்படையிலான கட்டணம் அறவிடப்படும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த விலை அறிமுகம் இவ்வருடம் மார்ச் மற்றும் செப்டெம்பர் மாதங்களில் அறிமுகம் செய்யப்படும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.  

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை மின்சார சபை ஆகியன ஈட்டும் நட்டங்களில் 90 சதவீதம் அரசாங்கத்தினால் கோரப்படும் கட்டுப்பாட்டு விலையில் அமைந்துள்ளதுடன், அவற்றுக்கு எவ்விதமான மானியங்களும் வழங்கப்படுவதில்லை என ஆளுநர் தெரிவித்தார்.  

சர்வதேச நாணய நிதியத்தின் கோரிக்கையின் பிரகாரம், இந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் செலவைப் பிரதிபலிக்கும் புதிய கட்டண அறவீட்டு முறை அறிமுகம் செய்யப்பட வேண்டும். இந்த முறையின் மூலமாக நாட்டின் பாரிய பொருளாதார சூழலை பெருமளவு மேம்படுத்தக்கூடியதாக இருக்கும் எனவும் மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்தார்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .