2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

வர்த்தகத்துறையில் பெண்களை ஊக்குவிக்கும் தையல் பயிற்சிகள்

Editorial   / 2018 மார்ச் 05 , பி.ப. 11:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

- கே.எல்.ரி.யுதாஜித்  

பெண்களை வர்த்தகத்துறையில் ஊக்குவிக்கும் வகையில் மட்டக்களப்பு மாவட்ட கிராம அபிவிருத்தி திணைக்களத்தினால் மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவின் மாதர் அபிவிருத்தி சங்கத்தினருக்காக நடத்தப்பட்ட தையல் பயிற்சியாளர்களின் பொருட்களின் கண்காட்சியும், பயிற்சிகளை நிறைவு செய்தவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு அண்மையில் மட்டக்களப்பில் நடைபெற்றது.  

படித்துவிட்டு வேலையற்று இருக்கின்ற யுவதிகளுக்கு ஒரு வருட டிப்ளோமா பயிற்சி நெறியை வழங்கி அவர்களுக்கான தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுக்கும் வகையில் மட்டக்களப்பு மாவட்ட கிராம அபிவிருத்தி திணைக்களம் ஆண்டு தோறும் செயல்பட்டு வருகின்றது.   

இதன் ஒரு கட்டமாக, 2017ஆம் ஆண்டு பயிற்சி நெறிகளை நிறைவு செய்துகொண்டு வெளியேறும் யுவதிகளின் திறமைகளை வெளிகாட்டும் வகையில் ஏற்பாடு செய்யப்பட பொருட்களின் கண்காட்சியும், விற்பனையும் மற்றும் அவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு இருதயபுரம் மேற்கு மாவட்ட கிராம அபிவிருத்தி அலுவலகத்தில் நடைபெற்றது.  

மண்முனை வடக்கு தையல் பயிற்சிகளுக்கான போதனாசிரியை திருமதி நந்தினி அன்ரனி ராஜார் ஒழுங்கமைப்பில், மண்முனை வடக்கு பிரதேச செயலக கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி. மாலதி மகேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மண்முனை வடக்கு பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.ஜதிஸ்குமார், மட்டக்களப்பு மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் கே. மோகன் பிறேம்குமார், சிரேஷ்ட தையல் போதனாசிரியர் திருமதி என். ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் அதிதிகளாகக் கலந்துகொண்டு கண்காட்சியை ஆரம்பித்து வைத்ததுடன் தையல் டிப்ளோமா பயிற்சிகளை நிறைவு செய்தவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கி வைத்தனர். 

அத்துடன், இருதயபுரம் கிழக்கு கிராம சேவை உத்தியோகத்தர் திருமதி. சுகந்தினி ஜெகதர்சன் மற்றும் ஜெயந்திபுரம், கருவேப்பங்கேணி பாரதிபுரம், மட்டிக்களி, புன்னைச்சோலை ஆகிய கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், மாதர் கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் மற்றும் பயிற்சிகளை நிறைவு செய்த யுவதிகளும் கலந்துகொண்டனர்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .