2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

வாடிக்கையாளர்களுக்கும் உப முகவர்களுக்கும் MMBL Money Transfer கௌரவிப்பு

Editorial   / 2018 ஏப்ரல் 11 , மு.ப. 03:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

  இலங்கையில் வெஸ்டர்ன் யூனியன் முகவரான MMBL Money Transfer (Pvt) Ltd, தனது மூன்று வாடிக்கையாளர்களையும் உயர் செயற்பாடு கொண்ட உப முகவர்களையும் நம்பிக்கை ஊக்குவிப்பின் ஓரங்கமாக மலேசியாவுக்கான மூன்று நாள் சுற்றுப்பயண வாய்ப்பை வழங்கி கௌரவித்துள்ளது. 

இவ்வெற்றியாளர்கள் MMBL Money Transfer (Pvt) Ltd நிறுவனத்தால் Aitken Spence Plc தலைமையகத்தில்  ஒழுங்கு செய்யப்பட்ட இரவு விருந்துபசாரத்திலும் கலந்து கொண்டனர்.      

“MMBL Money Transfer (Pvt) Ltd இன் வாடிக்கையாளர்  நம்பிக்கைத்  திட்டமானது, எங்களுடன் அடிக்கடி கொடுக்கல் வாங்கல் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு நன்றிகோரும் வகையில் அறிமுகப்படுத்தியுள்ள திட்டமாகும். மலேசியாவில் மூன்று நாள் சுற்றுப்  பயணம் எனும் மிகப்பெரிய பரிசை வழங்குவதன் மூலமும் இவ் ஊக்குவிப்புக் காலத்தில் ஏனைய பரிசில்களை வழங்கிக் கௌரவித்ததன் மூலமும் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளோம்” என Aitken Spence PLC இன் பணிப்பாளரும் MMBL Money Transfer (Pvt) Ltd இன் முகாமைத்துவப் பணிப்பாளருமான தினேஷ் மென்டிஸ் தெரிவித்தார்.

“MMBL க்கும் வெஸ்டர்ன் யூனியனுக்குமான அர்ப்பணிப்பான செயற்பாடுகளுக்காக 24 உயர் செயற்பாடு கொண்ட துணை முகவர்களை, மலேசியாவுக்கான  மூன்று நாள் சுற்றுப் பயண வாய்ப்பை வழங்கி கௌரவித்ததிலும் நாங்கள் மகிழ்ச்சியடைகின்றோம். எங்கள் நம்பிக்கைக்குரிய வாடிக்கையாளர்களையும் முகவர்களையும் எதிர்காலத்திலும் கௌரவிக்க நாங்கள் எண்ணியுள்ளோம்” என மேலும் அவர் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .