2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

வாழ்க்கைக்கு ஊட்டமளிக்கும் NNO

Editorial   / 2018 ஜூன் 21 , பி.ப. 05:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்ட இரவுநேர சருமப் பாதுகாப்பு ஊட்டமளிப்பான்களில் NNO முதலாவது வர்த்தக நாமமாக விளங்குகிறது.  

பெண்கள் வீட்டைவிட்டு வெளியேறும்போதும், பகல் நேரங்களிலும் தமது முகத்துக்கு எதையாவது பூசுவதைப் பொதுவான வழக்கமாகக் கொண்டுள்ளபோதும், இரவு நேரங்களில் படுக்கைக்குச் செல்லமுன்னர் அப்படிச் செய்வதில்லை.  

விஞ்ஞானத்தை அடிப்படையாகக் கொண்ட நிறுவனமான Mega Life sciences கம்பனியானது, இரவு நேரங்களில் சருமங்களுக்கு ஊட்டமளிப்பதே சருமத்தைப் புத்துணர்வுடன் பேணும் என்ற விஞ்ஞான ரீதியான ஆய்வுமுடிவுகளை நன்கு உணர்ந்துகொண்டு செயற்படுகிறது.  

மனித உடல் தன்னைப் புதுப்பித்துக் கொள்வதற்கு நாளாந்தம் எட்டு மணிநேரத் தூக்கம் அவசியம் என வைத்திய நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.   

சருமங்கள் உள்ளிட்ட மனித உடலானது பகல் வேளைகளில் பல அழுத்தங்களுக்கு முகங்கொடுக்கிறது. இதனால் ஏற்படுகின்ற தாக்கங்களிலிருந்து உடலைப் பாதுகாப்பதற்கும், சருமத்தைப் பேணி அழகாக வைத்திருப்பதற்கும் எட்டு மணிநேரத் தூக்கம் அவசியமாகும்.  

இவ்வாறான நேரத்தில் சருமத்துக்கு பூசப்படும் ஊட்டமளிப்பான்கள் சருமத்தால் அகத்துறிஞ்சப்பட்டு, சருமத்தைப் பொலிவாக வைத்திருக்க உதவும். சருமத்தைப் பொறுத்தவரையில் புதிய சரும அணுக்கள் தோன்றுவது மற்றும் சேதமடைந்த சரும அணுக்கள் புதுப்பிக்கப்படுவது என்பன இரவு நேரங்களிலேயே இடம்பெறுகின்றன.  

இரவு நேரங்களில் சருமத்துக்குப் பூசப்படும் ஊட்டமளிப்பான்கள் சருமத்தின் ஈரப்பதன், உறுதிப்பாடு, நெகிழ்ச்சித்தன்மை, முகத்துக்கான மென்மை என்பவற்றை வழங்குகின்றன என்ற எண்ணப்பாட்டின் அடிப்படையில் NNO தயாரிக்கப்பட்டுள்ளது.   

NNO பற்றிய விஞ்ஞான ஆய்வுகள், பிரான்ஸில் உள்ள ஸ்பின் கொன்ரோல் நிறுவனத்தால் நிரூபிக்கப்பட்ட உலக பாதுகாப்புப் பற்றிய சுவடுகளைக் கொண்டிருப்பதை உறுதிப்படுத்துகின்றன. சருமத்தின் அளவுருக்களான ஈரப்பதன், உறுதிப்பாடு, நெகிழ்ச்சித்தன்மை மற்றும் முகத்துக்கான மென்மை என்பவற்றை முதல் இரண்டு மூன்று வாரங்களிலேயே NNO வழங்குகிறது.   

பாதுகாப்பு, உச்சபலாபலன் தொடர்பில் நடத்தப்பட்ட ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்ட ஒரேயொரு வர்த்தக நாமமாக NNO அமைந்துள்ளது. நடுத்தர வயதுடைய தாய்மாருக்கு ஏற்படும் ஓமோன் மாற்றங்களால் தோன்றக் கூடிய வரண்ட சருமம், முகச்சுருக்கம் என்பவற்றை நீக்குவதற்கு NNO விசேடமானதாகும். குறிப்பாக இவர்கள் எதிர்கொள்ளும் வரண்ட, வயதான முகத்தோற்றத்துக்கு NNO தீர்வாக அமையும். இலங்கை மற்றும் வெளிநாடுகளில் வாடிக்கையாளர்கள் NNO தொடர்பில் தமது திருப்தியை வெளியிட்டுள்ளனர்.  

தாய்லாந்து, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் உற்பத்தித் தொழிற்சாலைகளைக் கொண்டுள்ளதுடன், 31 நாடுகளில் வியாபித்திருக்கும் NNO, Mega Lifesciences நிறுவனத்தால் உற்பத்தி செய்யப்படுகிறது.Mega Lifesciences இன் உள்ளூர் பங்குதாரராக 1897ஆம் ஆண்டு முதல் செயற்பாடுகளைக் கொண்டிருக்கும் சுவிஸ் நிறுவனமான A.Baur & Co Pvt Ltd கம்பனி காணப்படுகிறது.  

இலங்கையில் தனித்துவமான உற்பத்திகளை முதன்முதலில் அறிமுகப்படுத்துவதில் முன்னணி நிறுவனமாகத் திகழும் Mega Lifesciences இலங்கைத் தாய்மாருக்கு சர்வதேச நிபுணத்துவத்தைக் கொண்டுவருவதில் பங்களிக்கிறது.  

Mega Lifesciences தனது உற்பத்திகளை தானே உற்பத்தி செய்வதுடன், ஆரம்பம் முதல் இறுதிவரை தரத்தை உறுதிப்படுத்துகிறது. சகல உற்பத்திகளும் 100 சதவீதம் இயற்கையானது என்பதுடன், இயற்கைத் தன்மையை உறுதிப்படுத்தும் குளிர் அழுத்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது.  

நுகர்வோர் தம்முடன் எப்பொழுதும் எடுத்துச் செல்லக்கூடிய வகையில் இந்த உற்பத்திகள் அமைந்துள்ளன.  
நாடுமுழுவதிலுமுள்ள சூப்பர் மார்க்கட்டுகள் மற்றும் முன்னணி மருந்தகங்களில் 950 ரூபாய் விலையில் NNO கிடைக்கிறது.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .