2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

வாவிகளை புனரமைக்கும் நடவடிக்கைகளில் சம்பத் வங்கி

Editorial   / 2018 ஜூன் 15 , மு.ப. 09:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

சம்பத் வங்கி, நாட்டின் வாவிகள் வழங்கும் பெறுமதியான பங்களிப்பை எப்போதும் வரவேற்றிருந்தது. வங்கி ஸ்தாபிக்கப்பட்டது முதல், அதிகார அமைப்புகள் மற்றும் உள்நாட்டு சமூகங்களுடன் கைகோர்த்து, நாடு முழுவதிலும் காணப்படும் வாவிகளைப் புனரமைக்கும் நடவடிக்கைகளை ‘வாவிக்கு புத்துயிரளிப்பு’ எனும் திட்டத்தினூடாக முன்னெடுத்து வருகிறது.

இந்தத் திட்டத்தின் அங்கமாக, மின்னேரியா பிரதேச நீர்ப்பாசன பொறியியல் அலுவலகம் மற்றும் திவுலன்கடவல விவசாய சங்கம் ஆகியவற்றுடன் கைகோர்த்து மெதிரிகிரிய, திவுலன்கடவல பகுதியில் அமைந்துள்ள தன்யாவ வாவியைப் புனரமைக்கும் நடவடிக்கைகளை சம்பத் வங்கி அண்மையில் முன்னெடுத்திருந்தது.  

மின்னேரியாப் பிரதேச நீர்ப்பாசனப் பொறியியலாளர், பிரதேச செயலகத்தின் அதிகாரிகள், இதர சிரேஷ்ட அரசாங்க அதிகாரிகள் மற்றும் விவசாய சங்கத்தின் பிரதிநிதிகள் போன்றவர்கள் இந்தத் திட்டத்தின் வைபவ ரீதியான ஆரம்ப நடவடிக்கைகளில் பங்கேற்றிருந்தனர். 

இதில் சம்பத் வங்கியின் அதிகாரிகள் மற்றும் வாடிக்கையாளர்கள் மற்றும் மெதிரிகிரிய, ஹிகுரக்கொட சமூகங்களைச் சேர்ந்தவர்களும் பங்கேற்றிருந்தனர்.

திவுலன்கடவல பிரதேசத்தின் 10 கிராமத்தவர்களால் நிர்மாணிக்கப்பட்ட தன்யாவ வாவி, மழைநீரைச் சேகரித்து வைக்கும் நோக்கத்துடன் அமைக்கப்பட்டது. மின்னேரியா வாவியிலிருந்து பெறப்பட்ட நீரையும் சேகரித்து வைக்கும் வகையில் அமைந்திருந்தது. சில தசாப்த காலப்பகுதிக்கு முன்னர், அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட ‘மின்னேரியா ஜனபத’ திட்டத்தின் கீழ் தன்யாவ வாவி குறித்துக் கவனம் செலுத்தப்பட்டிருந்தது.  

இன்று, தன்யாவ வாவி, 112 ஏக்கர்களுக்கும் அதிகமான விவசாய நிலங்களில் விவசாய நடவடிக்கைகளை முன்னெடுக்கும் மூன்று கிராமங்களைச் சேர்ந்த 96 குடும்பத்தாருக்கு பிரதான விவசாய மூலமாக தன்யாவ வாவி காணப்படுகிறது. 

இதன் கிளையாறுகளூடாக அருகாமையில் வசிக்கும் 225 குடும்பங்களுக்கு குடிநீர் மற்றும் வீட்டுத்தேவைகளை நிவர்த்தி செய்வதற்கான நீர் விநியோகிக்கப்படுகிறது. திவுலன்கடவல மத்திய கல்லூரியைச் சேர்ந்த சுமார் 2,100 மாணவர்கள், தமது குடிநீரை இந்த வாவியின் கிளை ஆறுகளிலிருந்து பெறுகின்றனர்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .