2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

வியாபார பேச்சுவார்த்தைகளுக்காக உலகின் பணக்காரர் இலங்கை விஜயம்

Editorial   / 2019 ஜூலை 23 , மு.ப. 11:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

நைஜீரிய நாட்டவரும், Bellmari Groupஇன் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியும் Dangote Industries Limited இன் முன்னாள் பொது முகாமையாளருமான வஃவைலு பெல்லோ (Wafailu Bello) இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். இதன்போது, Idea Group Ltd உடன் வியாபார உறவுகளை ஏற்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடியிருந்தார். உலகின் கறுப்பு இன பணக்காரரான அலிகோ தங்கோட் (Aliko Dangote) இன் சகோதரர் வஃவைலு பெல்லோ (Wafailu Bello) என்பது குறிப்பிடத்தக்கது.

Idea Group Limitedஇன் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான சம்பத் மாயாகடுவ உடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின் போது, Idea தயாரிப்புகளை பொருளாதார ரீதியில் வளர்ந்து வரும் நைஜீரியா, அதனை அண்மைய நாடுகளுக்கு விநியோகிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டிருந்தது.

நைஜீரியா, அதை அண்மித்த நாடுகளில் சந்தை அபிவிருத்தி (பிரவேச) மூலோபாயம் தொடர்பில் அவர்கள் கலந்துரையாடியிருந்தனர். Idea தயாரிப்புகளுக்கு நைஜீரிய சந்தையைக் கையகப்படுத்தக்கூடிய இயலுமைகள் பற்றி அவர்கள் கண்டறிந்ததுடன், குறிப்பாக மேற்படி நாடுகளில் வளர்ந்து வரும் நிர்மாணத்துறையில் கவனம் செலுத்துவது பற்றி ஆராய்ந்திருந்தனர்.

Idea Group Ltd என்பது, இலங்கையின் நிறுவனம் என்பதுடன், கட்டடப் பொருட்கள் தயாரிப்பில் விசேடத்துவம் பெற்ற பன்முகப்படுத்தப்பட்ட வியாபாரங்களை கொண்ட நிறுவனமாகும். உள்நாட்டு,  ஏற்றுமதி சந்தைகளுக்கு i-Panel, i-Roof, Kalahari ஆகிய நாமங்களில் தயாரிப்புகளை வழங்கி வருகின்றது. 

வலு, லுப்ரிகன்ட்ஸ், கடற் போக்குவரத்து உதவி சேவைகள், வணிக பண்ணை செயற்பாடுகள் மற்றும் சரக்கு கையாளல் துறைகள் போன்றவற்றில் வியாபார ஈடுபாட்டை Bellmari Group கொண்டுள்ளது.

வஃவைலு பெல்லோ (Wafailu Bello) வங்கியியல் மற்றும் நிதியியல் துறையில் இளமானி பட்டத்தை போர்ட் ஹாகோட் பல்கலைக்கழகத்திலிருந்து பெற்றுக் கொண்டதன் பின்னர், வணிக நிர்வாகத்தில் முதுமானி பட்டத்தை ஃபெரிஸ் அரச பல்கலைக்கழகத்திலிருந்து பெற்றுக் கொண்டார். இரு தசாப்த காலப்பகுதிக்கு மேலாக வியாபார அனுபவத்தை கொண்டுள்ளார். வணிக முகாமைத்துவ செயற்பாடுகளில் நீண்ட காலமாக ஈடுபட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .