2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

விவசாயத்துறையில் பெண்களின் ஈடுபாட்டை மேம்படுத்த பயிற்சி

Editorial   / 2018 செப்டெம்பர் 23 , பி.ப. 12:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

விவசாயத்துறையில் பெண்களை ஒன்றிணைப்பதற்கான இரு நாள் பயிற்சி செயலமர்வு கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் அண்மையில் இடம்பெற்றது. 

அமைச்சுகள், தனியார் துறை, சிவில் சமூகம், நிறுவனங்கள் மற்றும் அபிவிருத்தி பங்காண்மை அமைப்புகளின் பிரதிதிகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். விவசாயத்துறை சார்ந்த அமைச்சுகளுடன் துறைசார் நிகழ்ச்சிகள், கொள்கைகளை வடிவமைத்தல், நடைமுறைப்படுத்தல், கண்காணிப்பு நடவடிக்கைகளைத் திட்டமிடல், நிதி ஒதுக்கிடல், கொள்கை அபிவிருத்தி போன்றன தொடர்பில் இந்த அமர்வில் கவனம் செலுத்தப்பட்டிருந்தது.  

இந்த அமர்வில் பங்கேற்றிருந்தவர்களுக்கு விவசாய பாலினக் கொள்கைகள், பாலின ரீதியில் அவர்களின் நிலைகளை ஆராய்தல் மற்றும் பாலின ரீதியில் காணப்படும் இடைவெளிகளை இனங்காணல் போன்ற விடயங்கள் தொடர்பில் அறிந்து கொள்ள முடிந்ததுடன், திட்டமிடல், நிதி ஒதுக்கிடல் மற்றும் கொள்கை அபிவிருத்தி போன்ற செயற்பாடுகளுக்கு கிராமிய மட்டத்தில் பயன்படுத்தப்படும் பொறிமுறைகள் பற்றிய விளக்கங்களும் வழங்கப்பட்டிருந்தன.  

FAO-EU FIRST கொள்கை ஆலோசனை அமைப்பு மற்றும் விவசாய நிகழ்ச்சித்திட்டத்தை நவீன மயப்படுத்தப்படுத்துவதற்கான தொழில்நுட்ப உதவி என்பவற்றின் ஒரு அங்கமாக பயிற்சி அமைந்துள்ளது. FIRST நிகழ்ச்சித்திட்டத்தினூடாக இலங்கைக்கு சுமார் 400,000 யூரோக்கள் உதவிகள் வழங்கப்படுகின்றன. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .