2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

விவசாயத்துறையை நவீன மயமாக்கும் கருத்திட்டக் கூட்டம்

Editorial   / 2019 மார்ச் 12 , பி.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி. யுதாஜித்  

2020 ஆம் ஆண்டளவில் ஏற்றுமதி வருமானத்தை இரு மடங்காக்குவதை நோக்காகக் கொண்ட விவசாயத்துறையை நவீன மயமாக்கும் கருத்திட்டத்தின் கீழ், மட்டக்களப்பு மாவட்டத்தில் அமுலாக்கப்பட்டு வரும் கருத்திட்டங்கள் தொடர்பில் ஆராயும் முதல் கட்டக் கூட்டம் மாவட்ட செயலகத்தில் கடந்த வாரம் நடைபெற்றது.  

ஆரம்ப கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் செய்யித் அலிசாஹிர் மௌலானா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மாவட்ட செயலாளர் எம். உதயகுமார் ஆரம்ப கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் பிராந்திய பணிப்பாளர் உபுல் டவலகள, பணிப்பாளர் இ.எம் வெள்ளப்பிலி, திட்ட பணிப்பாளர் ரோஹன கமகே, மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் சசிகலா புண்ணியமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.  

உலக வங்கியின் சர்வதேச அபிவிருத்தி முகவர் அமைப்பிடம் இருந்து பெற்றுக் கொண்ட 58.63 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில், இலங்கையின் ஐந்து மாகாணங்களின் ஏழு மாவட்டங்களில் ஐந்து ஆண்டு காலப்பகுதிக்கு இந்த விவசாயத்துறை நவீன மயமாக்கல் திட்டத்தைக் கமத்தொழில் அமைச்சு நடைமுறைப்படுத்தவுள்ளது.  

சிறு விவசாயிகள் உயர் பெறுமதி வாய்ந்த விவசாயப் பொருள்களை உற்பத்தி செய்தல், அவர்களின் சந்தைத் தேவைகளை நிவர்த்தி செய்தல், வீட்டு மற்றும் சர்வதேசச் சந்தைகளை அணுகுவதற்கு அவர்களது திறன்களை விருத்தி செய்தல், செயற்திறன் மிக்கதும் நிலைபேறான சந்தை பங்குபற்றுனராகவும் அவர்களை உருவாக்குவதுமே இத்திட்டத்தின் குறிக்கோள்களாகும்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .