2024 மார்ச் 28, வியாழக்கிழமை

வெற்றியை நோக்கி உங்களை வழிநடத்த யூனியன் அஷ்யூரன்ஸ் முன்வருகை

Editorial   / 2017 ஒக்டோபர் 18 , மு.ப. 05:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கையர்களுக்கு வெற்றியை பெற்றுக்கொடுக்கும் சிந்தனைகளை மக்கள் மத்தியில் பரவச்செய்யும் வகையில், யூனியன் அஷ்யூரன்ஸ் விசேட வர்த்தக நாம விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டமொன்றை ஆரம்பித்துள்ளது. நாடு முழுவதிலும் ஒக்டோபர் 9ஆம் திகதி முதல் இந்த நிகழ்ச்சித்திட்டத்தினூடாக விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட வண்ணமுள்ளன. நவம்பர் மாதம் நடுப்பகுதி வரை இந்த நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும்.  

மனிதர்கள் எனும் வகையில், எமது வாழ்க்கையில் எம் அனைவருக்கும் வெவ்வேறு இலக்குகளும் தேவைகளும் காணப்படுகின்றன. இவற்றை, சுகாதாரம், பாதுகாப்பு, கல்வி, முதலீடு மற்றும் ஓய்வூதியம் என வகைப்படுத்திக்கொள்ளலாம். வாழ்க்கையில் வெற்றி என்பது பெருமளவில் இந்த தேவைகளை நாம் எவ்வாறு கையாண்டு, அதனூடாக நாம் எதிர்பார்க்கும் வெற்றிகளை எவ்வாறு எய்துகிறோம் என்பதில் தங்கியுள்ளது. வெற்றியை நோக்கி நாம் பயணிக்கையில், பெருமளவான சந்தர்ப்பங்களில் ஏனையவர்களை முன்மாதிரியாகக் கொண்டு, அவர்களின் ஆலோசனைகள் மற்றும் கருத்துக்களைப்பெற்று, அவற்றைக்கொண்டு நாம் நடவடிக்கைகளை மேற்கொள்கிறோம். உங்களை வெற்றிகரமான பயணத்தை முன்னெடுத்துச்செல்ல வழிகாட்டும் ஒரு பங்காளராக யூனியன் அஷ்யூரன்ஸை குறிப்பிட முடியும். 30 வருட காலத்துக்கு மேலான அனுபவத்துடன், இலங்கையின் மக்களுடன் தோளோடு தோள்நின்று உழைத்துள்ளதுடன், தொடர்ந்தும் சிறந்த பெறுபேறுகளை பதிவு செய்த வண்ணமுள்ளது. நிறுவனம் நம்பிக்கையை வென்றி காப்புறுதியாளர் எனும் நாமத்தை உறுதியாக பதிவு செய்துள்ளது. 

யூனியன் அஷ்யூரன்ஸ் பெருமளவு தீர்வுகளை தனிநபர்களின் வெவ்வேறு தேவைகளை கவனத்தில் கொண்டு அறிமுகம் செய்துள்ளது. உயர் கல்வியில் ஆர்வமுள்ளவர்களுக்கென, நிறுவனத்தின் யூனியன் சுப்பர் இன்வெஸ்ட்டர் திட்டம் மற்றும் யூனியன் லைஃவ் அட்வான்டேஜ் ஆகியன அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. வெவ்வேறு முதலீட்டு திட்டங்களை எதிர்பார்ப்போருக்காக நிறுவனத்தினால் யூனியன் சுப்பர் இன்வெஸ்ட்டர், யூனியன் சலேஞ்சர் மற்றும் சிங்கிள் ப்ரீமியம் போன்றன அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு குறித்து கவனம் செலுத்துவோருக்காக, பரிபூரண காப்புறுதித்தீர்வாக, நிறுவனத்தினால் யூனியன் ஸ்மார்ட் ஹெல்த் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும், நிறுவனத்தினால் யூனியன் 60 ப்ளஸ் போன்ற சிரேஷ்ட பிரஜைகளுக்கான தீர்வுகளும் வழங்கப்படுகின்றன. 

சகல யூனியன் அஷ்யூரன்ஸ் தீர்வுகளும், சமூகத்தார் மற்றும் தனிநபர்கள் ஆகியோரின் வெவ்வேறு தேவைகள் மற்றும் ஈடுபாடுகளை கவனத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளன. மாறிவரும் காலத்தின் தேவைகளுக்கமைய, நிறுவனத்தினால் தொடர்ச்சியாக தமது தீர்வுகள் மெருகேற்றம் செய்யப்படுகிறது. மேலும், யூனியன் அஷ்யூரன்ஸ் மூலமாக, சௌகரியமான ஆயுள் காப்புறுதி தீர்வுகளை நாடுவோருக்கு பொருத்தமாக தீர்வுகள் மாற்றியமைத்துக் கொள்ளக்கூடிய வகையில் வழங்கப்படுகின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X