2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

வெளிநாடுகளிலிருந்து பண அனுப்புகை ஏப்ரல் மாதத்தில் 32.3 சதவீதத்தால் சரிவு

Editorial   / 2020 ஜூன் 24 , பி.ப. 12:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்கள் இலங்கைக்கு அனுப்பும் பணம், ஏப்ரல் மாதத்தில் 32.3 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. 2019ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில், இந்த வீழ்ச்சி பதிவாகி இருந்ததுடன், கொவிட்-19 தொற்றுப் பரவல் காரணமாக, இந்தச் சரிவு ஏற்பட்டுள்ளதாகவும் மத்திய வங்கி அறிவித்துள்ளது.   
கடந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களுடன் ஒப்பிடுகையில், 2020 ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் மொத்தமாக 9 சதவீத வீழ்ச்சியைப் பதிவு செய்திருந்ததாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.   

பயணிகள் விமானங்கள், கப்பல் போக்குவரத்து ஆகியன மார்ச் மாதம் நடுப்பகுதி முதல் இடைநிறுத்தப்பட்டு உள்ளதால், ஏப்ரல் மாதத்தில் சுற்றுலாப் பயணி எவரும் நாட்டுக்கு வருகை தரவில்லை. 2020ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 507,311 ஆகப் பதிவாகியுள்ளது.    

சுற்றுலாத் துறையால் ஈட்டும் வருமானம், முதல் நான்கு மாதங்களில் 956 மில். டொ. பதிவாகி இருந்ததுடன், 2019இன் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 44.1 சதவீத வீழ்ச்சி ஆகும். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .