2024 மார்ச் 28, வியாழக்கிழமை

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்துடன் எயார்டெல் பங்காண்மை

Editorial   / 2018 ஜூலை 18 , பி.ப. 11:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

எயார்டெல் நிறுவனம் ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்துடன் இணைந்து தொழில்துறை பங்காண்மை நிகழ்ச்சித் திட்டமொன்றை ஏற்பாடு செய்துள்ளது. தொழில்துறை சார்ந்த நிறுவனமும் கல்வித்துறை சார்ந்த நிறுவனமும் இணைந்து ஏற்பாடு செய்யும் தொழில்துறை பங்காண்மை நிகழ்ச்சித் திட்டம் ஊடாக, பட்டதாரி மாணவர்களுக்கு தாங்கள் கற்கும் கல்வியை நடைமுறையில் செயற்படுத்தும் விதத்தை அனுபவ ரீதியாக கற்றுக்கொள்ளும் வாய்ப்பு கிட்டுகிறது.

எயார்டெல் நிறுவனம் இத்திட்டத்தின் கீழ், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் சந்தைப்படுத்தல் முகாமைத்துவ கற்கைப் பிரிவிலும் வர்த்தக மற்றும் முகாமைத்துவ கற்கைகளுக்கான பீடத்திலும் கற்கும் மாணவர்களை உள்வாக்கியுள்ளது.

இதன்படி பல்கலைக்கழக மாணவர்களுக்கு கற்ற விடயங்களை நடைமுறையில் பரீட்சித்துப் பார்க்கச் சந்தர்ப்பம் கிடைப்பதுடன், குழுச் செயற்றிட்டங்களில் ஈடுபடுவதன் ஊடாகத் தொழில் சம்பந்தமான அனுபவ அறிவையும் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பும் கிடைக்கின்றது.

இது பற்றி கருத்து தெரிவித்த பார்தி எயார்டெல் லங்கா நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி, ஜினேஷ் ஹெக்டே “பல்கலைக்கழகப் படிப்பை முடித்தவுடன் உடனடியாகத் தொழில்துறையில் ஈடுபடக்கூடிய பட்டதாரிகளை உருவாக்கும் மற்றுமொரு முயற்சியில் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்துடன் இணைந்துள்ளோம். மாணவர்களுக்கு அரிதாகக் காணப்படும் அனுபவ அறிவை, இத்திட்டம் ஊடாகப் பெற்றுக்கொடுப்பதே எமது எதிர்ப்பார்ப்பாகும்” என்றார்.  

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் பல்வேறு துறைசார்ந்த பட்டப்படிப்பு கற்கைநெறிகளும் பட்டப்பின் படிப்பு கற்கைநெறிகளும் கற்பிக்கப்படுகின்றன.

இது பற்றிக் கருத்துத் தெரிவித்த ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக சந்தைப்படுத்தல் முகாமைத்துவப் பிரிவின் பிரதானி கலாநிதி லலித் சந்தரலால், “இந்தக் குறிப்பிடத்தக்க முன்னெடுப்பானது எதிர்கால சந்தைப்படுத்தல் விற்பன்னர்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள பல்கலைக்கழகத்தின் கற்றல் முறைகளுக்கு மெருகூட்டும் வகையில் அமைந்துள்ளது.  உயர்கல்வியின் தரத்தை மேம்படுத்துதல் நோக்கி எம்முடன் கைகோர்த்துள்ள பார்தி எயார்டெல் லங்கா நிறுவனத்துக்கு உளம்கனிந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்” என்றார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X