2024 மார்ச் 28, வியாழக்கிழமை

ஹேமாஸ் உறுதியான நிதிப் பெறுபேறுகளை பதிவு

Editorial   / 2020 ஏப்ரல் 07 , மு.ப. 11:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹேமாஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சி, கடந்த 9 மாதங்கள் நிறைவில், 47 பில்லியன் ரூபாயை வருமானமாக பதிவு செய்திருந்தது. இக்காலப்பகுதியில் நாட்டில் நிலவிய நெருக்கடியான சூழலிலும், இந்த வருமானத்தை நிறுவனம் பதிவு செய்திருந்தது. இக்காலப்பகுதியில் தொழிற்படு இலாபத்தை 2.6 பில்லியன் ரூபாயாக பதிவு செய்திருந்ததுடன், நாட்டினுள் பொருளாதார, சமூக, கலாசார மட்டத்தில் நெருக்கடியான நிலை காணப்பட்ட போதிலும், வியாபாரத்தில் அல்லது வாடிக்கையாளர்களுக்கு பாதிக்காத வகையில், நுகர்வோர் பொருட்கள் மற்றும் சுகாதார சேவைகள் பிரிவுகள் பங்களித்தன. முன்னைய நிதியாண்டின் 9 மாத காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில், கடந்த ஆண்டின் 9 மாத காலப்பகுதியில், உயர்ந்த வருமானத்தை பதிவு செய்வதில் ஹேமாஸ் நிறுவனத்துக்கு அட்லஸ் நிறுவனம் பெரும் பலமாக அமைந்திருந்தது.  

கடந்த 9 மாத காலப்பகுதியில், ஹேமாஸ் நுகர்வோர் பிரிவு ரூ. 1.7 பில்லியனை வருமானமாகவும், ரூ. 538.3 மில்லியயை தொழிற்பாட்டு இலாபமாகவும் பதிவு செய்திருந்தது. இலங்கை அரசாங்கத்தினால் அண்மையில் அறிமுகம் செய்யப்பட்டிருந்த VAT வரி குறைப்பை தொடர்ந்து, அதன் அனுகூலங்களையும் தமது வாடிக்கையாளர்களுக்கு பெற்றுக் கொடுக்கும் வகையில், பொருட்களின் விலைகளை குறைத்திருந்தது. ஹேமாஸ் வர்த்தக நாமத்தின் கீழ், இக்காலப்பகுதியில் உறுதியான விற்பனை மற்றும் விநியோக செயற்பாட்டு நடைமுறையை முன்னெடுக்க பெருமளவு செலவையும் முதலீட்டையும் மேற்கொண்டிருந்தது.  

நாட்டின் அபிவிருத்திக்கு பக்கபலமாக அமைந்திருக்கும் சுகாதார துறையின் முன்னேற்றத்திலும் பங்களிப்பு வழங்கும் ஹேமாஸ், அதில் வளர்ச்சியை பதிவு செய்து, தமது வருமானத்தை ரூ. 22.5 பில்லியன் வரை அதிகரித்து, அதனூடாக 9.8% 20 இரண்டாம் காலாண்டு பகுதியுடன் ஒப்பிடுகையில், தொழிற்பாட்டு இலாபம் சுமார் ரூ. 100.0 மில்லியனினால் அதிகரித்துடன், மருந்துப்பொருட்கள் உற்பத்தி பிரிவுக்கு பக்கபலமாக அமைந்துள்ள மொரிசன்ஸ் பிஎல்சி நிறுவனம் கடந்த 9 மாதங்கள் நிறைவில், 2.7 பில்லியன் ரூபாயை வருமானமாகவும், ரூ. 187 மில்லியனை தொழிற்பாட்டு இலாபமாகவும் பதிவு செய்திருந்தது.

ஹேமாஸ் குழுமத்தின் செரண்டிப் ஹோட்டல் தொடரும், ரூ. 995.3 மில்லியனை வருமானமாக பதிவு செய்திருந்தது. அத்துடன், ஹோட்டல்களில் தங்கியிருப்போரின் தொகையையும் கடந்த 9 மாதங்களில் /20 இரண்டாம் காலாண்டு பகுதியுடன் ஒப்பிடுகையில், தொழிற்பாட்டு இலாபம் சுமார் ரூ. 100.0 மில்லியனினால் அதிகரித்துடன், மருந்துப்பொருட்கள் உற்பத்தி பிரிவுக்கு பக்கபலமாக அமைந்துள்ள மொரிசன்ஸ் பிஎல்சி நிறுவனம் கடந்த 9 மாதங்கள் நிறைவில், 2.7 பில்லியன் ரூபாயை வருமானமாகவும், ரூ. 187 மில்லியனை தொழிற்பாட்டு இலாபமாகவும் பதிவு செய்திருந்தது. ஹேமாஸ் குழுமத்தின் செரண்டிப் ஹோட்டல் தொடரும், ரூ. 995.3 மில்லியனை வருமானமாக பதிவு செய்திருந்தது. அத்துடன், ஹோட்டல்களில் தங்கியிருப்போரின் தொகையையும் கடந்த 9 மாதங்களில் 73% ஆக பேணியிருந்தது. 

அன்று முதல் இன்று வரையில் வாடிக்கையாளர் சமூகத்துடன் கவனமாக பேணி வரும் நம்பகத்தன்மையை அவ்வாறே தக்க வைத்துக் கொண்டு, இடர்களுக்கு சளைக்காமல் முகங்கொடுத்து, மிகவும் அர்ப்பணிப்புடன் வினைத்திறன் வாய்ந்த சேவையை தமது செயலணியுடன் வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதற்கு ஹேமாஸ் அர்ப்பணிப்புடன் செயலாற்றுகின்றது. தமது வளர்ச்சியை சளைக்காமல் அதே நிலையில் பேணி, உள்நாட்டு பொருளாதாரத்துக்கு வலுவூட்டும் காரணியாக, நுகர்வோரின் உணர்வுகள் மற்றும் தேவைகள் தொடர்பில் தொடர்ச்சியாக இனங்கண்டு, பொருளாதார, சமூக மற்றும் கலாசார முன்னேற்றத்தை ஏற்படுத்த தொடர்ந்தும் தமது நடவடிக்கைகளை அர்ப்பணிப்புடன் முன்னெடுத்து வருகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X