2024 மார்ச் 28, வியாழக்கிழமை

ஹோட்டல் துறையில் 2017 ஆம் ஆண்டின் வெற்றியாளர் விவரங்கள்

Editorial   / 2017 ஒக்டோபர் 19 , மு.ப. 02:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஹோட்டல் துறையில் 2017ஆம் ஆண்டுக்கான 46 முன்னணி நட்சத்திரங்களைக் கொண்ட, இலங்கை ஹோட்டல்கள் சங்கத்தினால் (THASL) இறுதிப் பெயர்ப்பட்டியல் வெளியிட்டுள்ளது. பிராந்திய மற்றும் தேசிய மட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட மூன்று மாதகால மதிப்பீடுகளின் பின் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பிரதானமாக - கொழும்பு, நீர்கொழும்பு, மத்திய மலைநாடு மற்றும் தென் பகுதிகள் என்பன போட்டியில் முன்னணி வகித்துள்ளன. 2017ஆம் ஆண்டுக்கான ஹொட்டேல் துறை முன்னணி நட்சத்திரங்கள் தெரிவானது, கடுமையான கட்டுப்பாடுகளையும் மதிப்பீடுகளையும் கொண்டிருந்தது. இது, இத்துறையில் சிறந்து பணியாற்றும் இளம் சந்ததியினருக்கு விருதுகளையும் ஊக்குவிப்புக்களையும் பெற்றுக்கொடுக்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 200 க்கும் மேற்பட்ட அங்கத்துவ ஹோட்டல்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆயிரக்கணக்கான இளம் திறமைசாலிகள், உபசரணையாளர் / பணியாளர், வரவேற்பாளர், பொதுப் பணியாளர், அறைப் பணியாளர், உதவியாளர் / உணவு மேசைப் பணியாளர், சமையலறை உதவியாளர், பார் பணியாளர், நீச்சல் தடாகப் பணியாளர் / உயிர் காப்பாளர் மற்றும் தொலைபேசி இயக்குநர்கள் ஆகிய 9 பிரிவுகளின் கீழ் தெரிவு செய்யப்பட்டனர்.

திறமை மிக்க, ஹோட்டல் துறையில் அனுபவம் வாய்ந்த மற்றும் ஏனைய துறைகளிலும் தேர்ச்சி பெற்ற சிறந்த நடுவர்கள் குழுவினால் இந்த மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டன. திலீப் டி சில்வா, திருமதி ரோஷி சேனாநாயக்க - பிரதமரின் பேச்சாளர், பிரதமர் அலுவலகப் பிரதித் தலைவர் மற்றும் மகளிர் உரிமைகள் செயற்பாட்டாளர், செல்வி ஒட்டாரா குணவர்தன - தொழில் முயற்சியாளர், பொதுநலவாதி, ஒடெல் நிறுவன ஆரம்பகர்த்தா, ஒட்;டாரா மையம் மற்றும் எம்பாக் ஆகியவற்றின் பிரதம நிறைவேற்று அதிகாரி, பெடி விதான - முன்னாள் இலங்கை சுற்றுலாச் சபையின் தலைவர், பிரதமரின் ஆலோசகர் மற்றும் அன்டன் கொட்பிரே - தலைவர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி AGXA மற்றும் AG இன்டர்நஷனல் நிறுவனம் ஆகியோர் இதில் பிரதான நடுவர்களாகக் கலந்து கொண்டனர்.

ஹோட்டல் துறை பற்றிய, இலங்கையின் முதலாவது, நாடு தழுவிய போட்டி தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த, இலங்கை ஹோட்டல்கள் சங்கத்தின் தலைவர் சனத் உக்வத்த, ‘இவ்வாறான ஒரு போட்டியை ஹோட்டல்கள் சங்கம் இலங்கையில் ஏற்பாடு செய்தது இதுவே முதல் தடவையாகும்’ என்று கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X