2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

16 பொலிஸ் நிலையங்களுக்கு சிக்கல்

Editorial   / 2017 டிசெம்பர் 31 , பி.ப. 02:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

 

வடமாகாணத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு எதிராக, கடந்த வருடம் ஜனவரி மாதத்தம் முதல் டிசெம்பர் மாதம் இறுதி வரையான காலப்பகுதி வரை  51 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக, வடமாகாண தேசிய பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில், வடமாகாண தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் பணிப்பாளர் சுப்பையா சண்முகரட்ணம் நேற்று (30) கருத்துத் தெரிவிக்கையில்,

“இம்முறைப்பாடுகள், யாழ். மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.  மன்னார்,யாழ்ப்பாணம்,கோப்பாய், கொடிகாமம், சாவகச்சேரி, பருத்தித்துறை, வட்டுக்கோட்டை,வவுனியா, கிளிநொச்சி, அச்சுவேலி, சுண்னாகம், மானிப்பாய், இளவாலை, மல்லாவி, மாங்குளம், நெல்லியடி ஆகிய பொலிஸ் நிலையங்களுக்கு எதிராகவே, இம்முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

“ஜனவரி மாதத்தில் இருந்து டிசெம்பர் மாதத்தின் இறுதி வரையான காலப்பகுதியில் பொதுமக்கள் ஒருசிலர் தமது பிரச்சினைகள் தொடர்பில் பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் மேற்கொண்டுள்ளனர்.

“இருந்தபோதும், எந்தவிதமான நடவடிக்கைகளும் பொலிஸ் நிலையத்தால் மேற்கொள்ளப்படவில்லை என்ற குற்றச்சாட்டிலேயே பொலிஸ் நிலையங்களுக்கு எதிராக இம்முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

“குறிப்பிட்ட 16 பொலிஸ் நிலையங்களில், யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்கு எதிராக 8 முறைப்பாடுகளும் மானிப்பாய் பொலிஸ் நிலையத்துக்கு எதிராக 6 முறைப்பாடுகளும், கோப்பாய், கிளிநொச்சி, சுண்னாகம் ஆகிய பொலிஸ் நிலையங்களுக்கு எதிராக தலா 4 முறைப்பாடுகளும் நெல்லியடி, வட்டுக்கோட்டை, அச்சுவேலி, கொடிகாமம் பொலிஸ் நிலையங்களுக்கு எதிராக தலா 03 முறைப்பாடுகளும் பருத்தித்துறை, சாவகச்சேரி பொலிஸ் நிலையங்களுக்கு எதிராக தலா 02 முறைப்பாடுகளும் மன்னார், வவுனியா, இளவாலை, மல்லாவி, மாங்குளம் ஆகிய பொலிஸ் நிலையங்களுக்கு எதிராக தலா 01 முறைப்பாடும் பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கு எதிராக 04 முறைப்பாடுகள் உட்பட 51 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த முறைப்பாடுகள் தொடர்பில் அப்பொலிஸ் பரிவுக்குட்பட்ட பிராந்திய  சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டு அவற்றில் 35 முறைப்பாடுகளுக்குத் தீர்வு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன.

“பொதுமக்களால் தங்களின் பிரச்சினைகள் சம்பந்தமாக பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு, அம்முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸ் நிலையத்தில் உள்ள பொலிஸார் நடவடிக்கை எடுக்கவில்லையாயின், அது தொடர்பான தங்களின் முறைப்பாடுகளை பொதுமக்கள் நேரிலோ அல்லது கடிதம் மூலமாகவோ யாழ். கச்சேரியில் அமைந்துள்ள வடமாகாண தேசிய பொலிஸ் ஆணைக்குழு அலவலகத்தில் அறிவிக்க முடியும்.

“இதன்மூலம் உரிய பொலிஸ் நிலையங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பான விழிப்புணர்வு மக்கள் மத்தியில் குறைவாகவுள்ளது. இது தொடர்பில், தற்போது பிரதேச செயலக மட்டத்தில், ஒவ்வொரு கிராமசேவையாளர் பிரிவுகளிலும், விழிப்புணர்வு நடவடிக்கை, கூட்டங்கள் நடத்தி வருகின்றது” எனத் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .