2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

28 ஆண்டுகளின் பின் மீள்குடியேறியோருக்கு 7 வருடங்களாக அடிப்படை வசதிகளில்லை

Editorial   / 2018 நவம்பர் 04 , பி.ப. 05:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்ரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு - கருநாட்டுக்கேணியில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்கள், 28 ஆண்டுகளுக்குப் பின்னர் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட போதும், தமக்கான போதிய அடிப்படை வசதிகள் ஏற்படுத்தித் தரவில்லையெனக் குறிப்பிடுகின்றனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் கருநாட்டுக்கேணி, கொக்கிளாய், கொக்குத்தொடுவாய் போன்ற கிராமங்களில் வாழ்ந்த மக்கள், கடந்த 1983ஆம் ஆண்டு நிலவிய காரணமாக, அங்கிருந்து ஒரே நாளில் வெளியேற்றப்பட்ட நிலையில், முல்லைத்தீவு, முள்ளியவளை மற்றும் பிற மாவட்டங்களில் இடம்பெயர்ந்து வாழ்ந்தனர்.

இந்நிலையில், கடந்த 2011ஆம் ஆண்டு, மீண்டும் அந்த மக்கள், சொந்த இடங்களில் மீள்குடியேற்றப்பட்டனர். இவ்வாறு, கருநாட்டுக்கேணி கிராமத்தில் மீள்குடியேற்றப்பட்ட 25 சதவீதமான குடும்பங்களுக்கு, இதுவரை நிரந்தரமான வீட்டுத்திட்டங்கள் வழங்கப்படவில்லை என்பதோடு, 10 சதவீதமான மக்களுக்கு, மின்சார இணைப்புளும் கிடைக்கவில்லையெனத் தெரிவிக்கப்படுகிறது.

தவிர, சிறுகடல் வற்றும் காலங்களில், மீன்பிடிப் படகுகளைக் கரை சேர்ப்பதில் பாரிய பிரச்சினைகள் இருப்பதால், இந்தப் பகுதிகளில், இறங்குதுறை ஒன்றை அமைத்துத் தருமாறு கோரிக்கை விடுத்துள்ள இம்மக்கள், தமது கிராமங்களுக்கான வீதிகளையும் புனரமைத்துத் தருமாறும் ஆரம்பச் சுகாதார நிலையம் ஒன்றை அமைத்துத் தருமாறு கோரிக்கை விடுக்கின்றனர்

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .